Published : 16 Feb 2017 07:43 PM
Last Updated : 16 Feb 2017 07:43 PM

பெரும்பான்மையை நிரூபித்து ஜெ. ஆட்சியைத் தொடர்வோம்: எடப்பாடி பழனிசாமி

பெரும்பான்மையை நிரூபித்து ஜெயலலிதா ஆட்சியைத் தொடர்வோம் என்று புதிய முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமகூறியுள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை அவர் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

புதிய முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மெரினாவில் தலைவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். பெரும்பான்மையை நிரூபித்து ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடர்வோம்'' என்றார்.

ஜெ. நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

வீடியோ இணைப்பு: