Published : 01 Aug 2016 09:31 AM
Last Updated : 01 Aug 2016 09:31 AM

பெட்ரோல் விலை ரூ.1.42 குறைப்பு: டீசல் விலையும் ரூ.2.01 குறைந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01-ம் குறைக்கப் பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய வற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத் துறை எண் ணெய் நிறுவனங்கள் 15 நாட் களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகை யில் கடந்த ஜூலை 15-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25-ம், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்ட ருக்கு ரூ.1.42-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01-ம் குறைக்கப் பட்டுள்ளது. இந்த புதிய விலை மாற்றங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்கள் அறிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x