Last Updated : 04 Sep, 2016 11:38 AM

 

Published : 04 Sep 2016 11:38 AM
Last Updated : 04 Sep 2016 11:38 AM

பூனைகள், நாய்களுக்கு தினமும் உணவு அளிக்கும் ஊழியர்: சிறு ஊதியத்தில் பெரும்பகுதியை செலவிடுகிறார்

பள்ளிவாசல் ஊழியர் ஒருவர் திருநெல் வேலியில் 30-க்கும் மேற்பட்ட பூனைகள், 15-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு அடைக் கலம் கொடுத்து, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அவற்றுக்கு உணவளித்து வருகிறார். இதற்காக தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் 75 சதவீதத்தை செலவிட்டு ஜீவகாருண்யத்துக்கு உதார ணமாக இருக்கிறார்.

திருநெல்வேலி பேட்டை எம்ஜிபி 4-வது வடக்கு தெருவில் வாடகை வீட்டில் குடியிருக்கும் எம்.முஹம்மது அயூப்(50), டவுன் மேலரதவீதி வி.எம்.பள்ளிவாச லில் பாங்கு சொல்வது மற்றும் சுத் தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரு கிறார். 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் இவர், கடந்த 2011-ம் ஆண்டில், ‘நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நிரந்தரமாக தங்கின

இவரது வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட பூனைகள் தினமும் வருகின்றன. அவற் றுக்கு மதியம் மீன் சாப்பாடு, காலை, இரவு வேளைகளில் பால் வழங்கி கவனிக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக பூனைகளுக்கு உணவளிப்பதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார். இதனால் இவர்களது வீட்டில் 22 பூனைகள் நிரந்தரமாகவே தங்கி இருக்கின்றன. வாரத்தில் 5 நாட்களுக்கு மீன் வாங்கி சமைத்து பூனைகளுக்கு கொடுக்கிறார். இதுபோல், 15 நாய் களுக்கும் உணவளித்து வருகிறார்.

தினமும் அதிகாலை 4.30 மணியளவில் பள்ளிவாசலில் பாங்கு சொல்வதற்கு செல்லும் முன் வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் 10-க்கும் மேற்பட்ட நாய் களுக்கு பிஸ்கெட் வழங்குகிறார். இதற்காக எந்நேரத்திலும் தனது பையில் பிஸ்கெட் பாக்கெட்களை வைத்திருக் கிறார்.

அவருக்கு பள்ளிவாசல் பணியில் கிடைப்பது மிகவும் சொற்ப வருமானம் தான். அதில் பெரும்பகுதியை பூனை, நாய்களின் உணவுக்காக செலவிடுகிறார்.

பணி நிமித்தம் அவர் வெளியூருக்கு சென்றால், அவரது மனைவி லைலா பேகம், மகன்கள் முகமது இலியாஸ், முகமது அபுபக்கர்சித்திக் ஆகியோர், பூனை மற்றும் நாய்களுக்கு உணவளிக்கின்றனர்.

ஆத்ம திருப்தி

முஹம்மது அயூப் கூறும்போது, ‘‘வீட்டில் உள்ளவர்களும் ஒத்துழைப்பு அளிப்பதால்தான் இந்த பணி தடங்கல் இல்லாமல் நடக்கிறது. மழைக் காலத் தில் பூனைகள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே கழிவுகளை கழித்து விடும். அதை அகற்றி சுத்தப்படுத்துவது, துணிகளில் சிறுநீர் கழித்துவிட்டால் அவற்றை துவைப்பது போன்ற பணிகளில் முகம் சுளிக்காமல் வீட்டில் உள்ளவர்கள் ஈடுபடுவதால் எனக்கு சோர்வு ஏற்படவில்லை. கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும் பகுதியை இதற்காக செலவிட்டாலும், இதில் ஆத்ம திருப்தி இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x