Published : 02 Jan 2015 10:20 AM
Last Updated : 02 Jan 2015 10:20 AM

புத்தாண்டு கொண்டாடிய கும்பல் வன்முறை: முத்துப்பேட்டை தர்கா சூறை; மதில் சுவர் இடிப்பு - 65-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

புத்தாண்டு கொண்டாடிய கும்பல் நடத்திய வன்முறையால் முத்துப் பேட்டை ஜாம்புவானோடை அம்மா தர்கா சூறையாடப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையில் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 50-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் கூச்சலிட்டபடி வீதிவீதியாக வலம் வந்தது.

அப்போது, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜாம்புவானோடை தர்கா வாசலில் நின்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கும்பலில் வந்த வர்கள் தர்கா முன்பு நின்றவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.

இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம் முகமது (45), கலீலுர் ரகுமான் (26) மற்றும் பாதுகாப்புப் பணியி லிருந்த இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் ஆகியோர் பலத்த காய மடைந்தனர். அங்கிருந்து சென்ற கும்பல், மீண்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருடன் திரும்பிவந்து, அங்குள்ள அம்மா தர்காவுக்குள் புகுந்து விளக்குகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, தர்காவின் சுற் றுச்சுவரை சுமார் 100 அடி நீளத் துக்கு கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங் களைக் கொண்டு இடித்து தரை மட்டமாக்கியது.

பின்னர், அருகிலிருந்த வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியதுடன், கூரை களையும் பிரித்து வீசியது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்துப் பேட்டையை அடுத்த செம்படவன் காட்டில் மற்றொரு கும்பல் தாக்கிய தில் பாலமுருகன் என்பவரின் பட்ட றையில் நின்ற 3 கார்களின் கண் ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலவரம் நடந்தபோது, “அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் குறைந்த அளவிலான போலீஸாரே பணி யில் இருந்ததாகவும்” தர்கா நிர்வாகி கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காயமடைந்த கலீலுர் ரகுமான் மற்றும் தர்கா முதன்மை அறங் காவலர் பாக்கர்அலி சாகிப் ஆகி யோர், “அம்மா தர்காவை இடிக்கும் நோக்கத்துடன் வந்த கும்பல் மதில் சுவரை இடித்து, அருகில் இருந்த வீடுகளை சூறை யாடியது. தர்காவில் தங்கியிருந்த ஊழியர்கள், பக்தர்கள் மீது அரி வாள், கடப்பாரை போன்ற ஆயுதங் களுடன் வந்து தாக்குதல் நடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்தனர்.

அதன்படி, முத்துப்பேட்டை போலீஸார் 65-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் மற்றொரு புகாரின் பேரில், 3 கார்களை உடைத்த கும்பலைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x