Published : 20 Apr 2016 10:39 AM
Last Updated : 20 Apr 2016 10:39 AM

புதிய தமிழகம் கட்சியின் 4 வேட்பாளர்கள் அறிவிப்பு: மீண்டும் ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணசாமி மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி களம் காண்கிறது. அக்கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், கிருஷ்ணாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்தார்.

வேட்பாளர்கள் விவரம்:

1. ஒட்டப்பிடாரம் - கிருஷ்ணசாமி

2. வாசுதேவநல்லூர் - அன்பழகன்

3. கிருஷ்ணாபுரம்- வி.கே.ஐயர்

4. ஸ்ரீவில்லிபுத்தூர்- முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x