Published : 07 May 2015 12:08 PM
Last Updated : 07 May 2015 12:08 PM

பிளஸ் 2 தேர்ச்சியில் வழக்கம்போல் மாணவிகள் முன்னிலை

பிளஸ் 2 தேர்வுகளில் வழக்கம்போல் மாணவர்களைவிட அதிகளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

இத்தேர்வின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%. கடந்த ஆண்டும் இதே தேர்ச்சி விகிதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.4%. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் மாற்றமில்லை. ஆனால், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் .1% முன்னேற்றம் காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x