Published : 17 May 2016 11:47 AM
Last Updated : 17 May 2016 11:47 AM

பிளஸ் 2 சதங்கள்: அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் 4,341 பேர், குறைந்தபட்சமாக இயற்பியலில் 5 பேர் சாதனை

பிளஸ் 2 தேர்வு பாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையில், கணக்குப்பதிவியல் பாடத்தில் அதிகபட்சமாக ,341 பேரும், குறைந்தபட்சமாக இயற்பியலில் 5 பேரும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ் 2 முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%.

பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்:

இயற்பியல் - 5

வேதியியல் - 1,703

உயிரியல் - 775

தாவரவியல் - 20

விலங்கியல் - 10

கணிதம் - 3361

கணினி அறிவியல் - 303

வணிகவியல் - 3084

கணக்குப்பதிவியல் - 4341

பிசினஸ் கணிதம் - 1072

வேதியியல் பாடம் மிகக் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அப்பாடத்தில் 1,703 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x