Published : 09 Nov 2014 12:29 PM
Last Updated : 09 Nov 2014 12:29 PM

பிரேமானந்தா ஆசிரமத்தில் முதல்வர் விக்னேஸ்வரன்: சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்திக்கிறார்

புதுக்கோட்டை அருகேயுள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பாத்திமா நகரில் 1990-ல் ஆசிரமத்தை நிறுவிய பிரேமா னந்தா அங்கு வருவோருக்கு அருளாசி வழங்கி வந்தார். அதன்பிறகு அவர் மீது பாலியல் சர்ச்சை எழுந்ததையடுத்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட் டிருந்த பிரேமானந்தா கடந்த 2011-ல் இறந்தார். அவரது உடல் பாத்திமா நகரில் உள்ள ஆசிரமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேமா னந்தா இறந்த பிறகும் நிர்வாகி களால் ஆசிரமம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வதற்காக சென்னைக்கு நேற்று முன்தினம் வந்த சி.வி.விக்னேஸ் வரன், அங்கிருந்து கார் மூலம் பிரேமானந்தா ஆசிரமத்துக்கு வந்தார். அவருக்கு ஆசிரம நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர், இரவிலேயே ஆசிரமத்தை சுற்றிப்பார்த்த அவர், ஆசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்ட றிந்தார். இதைத் தொடர்ந்து பிரேமானந்தாவை அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப் பட்டுள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, ஆசிரமத்தில் உள்ள வீட்டில் தங்கிய சி.வி.விக்னேஸ்வரன், நேற்று அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.

அவரது வருகையையொட்டி, புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.பாலகுரு தலைமையில் புதுக்கோட்டை மற்றும் திருச்சியைச் சேர்ந்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தனிப்பட்ட பயணம்

விக்னேஸ்வரன் வருகையை முன்னிட்டு அவரைச் சந்திக்க செய்தியாளர்கள் ஆசிரமம் முன் கூடியிருந்தனர். நேற்று காலை ஆசிரமத்திலிருந்து காரில் வெளியே வந்தபோது செய்தியாளர்கள் சிலர் விக்னேஸ்வரனை சந்திக்க முயன்றனர். விக்னேஸ்வரன் காரிலிருந்தபடியே, “இது எனது தனிப்பட்ட பயணம். சென்னையில் கட்டாயம் நான் செய்தியாளர்களைச் சந்திக் கிறேன்” எனக் கூறிவிட்டு சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x