Last Updated : 17 Feb, 2017 12:06 PM

 

Published : 17 Feb 2017 12:06 PM
Last Updated : 17 Feb 2017 12:06 PM

பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

*

8.50 pm: அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவெடுக்க வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளார்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ''தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறக் கூடாது என்பதற்காக உடல்நிலையைக் கூட பாராமல் ஜெயலலிதா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குத்தான். அவரது எண்ணங்கள் நிறைவேற அதிமுக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்'' என்றார். அதன் விவரம்: >அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும்: ஓபிஎஸ்

7.30 pm ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது கட்சியின் விதிகளுக்குப் புறம்பானது. அவர் அதிமுகவில் செய்த நியமனங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் புகாருக்கு வரும் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் விவரம்: >சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

7.20 pm திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறார். அவர் விரைவில் அதிமுகவில் சேருவதாகத் தகவல் வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். அதன் விவரம்: >சசிகலாவுக்கு ஆதரவாகவே திருநாவுக்கரசர் பேசி வருகிறார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

7:10 pm: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங். வாக்களிக்கும் என சமூகவலைதளத்தில் வெளியான தகவல் தவறானது. காங்கிரஸ் தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் - திருநாவுக்கரசர்

6:45 pm: ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் திமுக வரவேற்கும்: ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ''அதிமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்களிப்போம். ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் திமுக வரவேற்கும்'' என்றார். அதன் விவரம்: >எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுகவின் 89 உறுப்பினர்களும் வாக்களிக்க முடிவு: ஸ்டாலின்

6.25 pm: சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுகவும், காங்கிரஸும் முடிவு செய்துள்ளன.

5.30 pm: சென்னை அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

5.25 pm: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

5.17 pm: தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் நிலையில், சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

5.08 pm: சசிகலாவை நீக்க மதுசூதனனுக்கு அதிகாரம் கிடையாது என்று அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

4.43 pm: "திமுக மட்டுமே திராவிடக் கட்சி. அதிமுக திராவிடக் கட்சியின் வழித் தோன்றல் கிடையாது. தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் திமுகவே வெற்றி பெறும்" என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். அதன் விவரம்: >குறுக்குவழியில் திமுக ஆட்சியைப் பிடிக்காது: கனிமொழி

4.13 pm: "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம் என்று அன்போடு காவல்துறையினரை வேண்டிக்கொள்கிறேன்'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம்> > அமைதிப்பூங்காவான தமிழகத்தை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம்: ஓபிஎஸ் கோரிக்கை

3.33 pm: "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்காலிக அரசாகவும், பினாமி அரசாகவும் செயல்படக் கூடாது" என்று விடுதலை சிறுதைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

2 .43 pm: சட்டப் பேரவை அவை முன்னவராக அதிமுகவின் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலிலதா ஆட்சியில் சட்டப் பேரவை அவை முன்னவராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: >சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்

1.45 pm: "மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதே எனது கடமை. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை. அந்த அடிப்படையில் எனது ஆதரவு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்குதான். இதை எதிரொலிக்கும் வகையில்தான் சட்டப்பேரவை வாக்கெடுப்பில் எனது வாக்கை செலுத்துவேன்" என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் கூறியுள்ளார். விவரம்> >மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு: நட்ராஜ் விளக்கம்

மயிலாப்பூர் தொகுதி மக்களின் கருத்தை அறிந்து நல்ல முடிவெடுப்பேன் என்று அத்தொகுதியின் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இப்போது அவர் தன் முடிவை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இவரது ஆதரவு யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர். நட்ராஜின் ஆதரவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 10 ஆக (ஓ. பன்னீர்செல்வத்தை தவிர்த்து) அதிகரித்துள்ளது. இதுவரை 12 எம்பிக்கள் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

1.30 pm: தமிழகத்தில் தற்போது தொடங்கியிருக்கும் புதிய கலாச்சாரம் 'சமாதி அரசியல்' என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலாக தெரிவித்திருக்கிறார். விவரம்> > தமிழகத்தில் தொடங்கியிருக்கும் புதிய கலாச்சாரம் 'சமாதி அரசியல்': ராமதாஸ் கிண்டல்

1 .20 pm: கூவத்துரில் இன்று மாலை 3 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

1.15 pm:நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜனும் பங்கேற்குமாறும் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

1.05 pm: சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12.56 pm: "நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுப்போம்" என்று முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

12.48 pm: நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வத்துடன், முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், மாஃபா பாண்டியராஜன் உடன் சென்றுள்ளனர்.

12.30 pm: சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். விவரம்> >சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவிப்பு

12.15 pm: தமிழக முதல்வராக பதவியேற்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். விவரம்> >மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் கடிதம்

12.00 pm: தமிழக முதல்வர் செயல்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

11.40 am: எடப்பாடி பழனிசாமி முதல்வரானதை கண்டித்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் முன்பு, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவரம்> >எடப்பாடி பழனிசாமி முதல்வரானதை எதிர்த்து சேலத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் | படம்: எஸ்.குரு பிரசாத்

11.22 am: நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கஅதிமுக எம்எம்ஏ நட்ராஜ் முடிவு செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

11.15 am: "பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாளை ஒற்றுமையாக இங்கிருந்து ஒன்றாக செல்வோம். அதற்காகவே கூவத்தூரில் தங்கியிருக்கிறோம்" அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மனியன்.

11.00 am: தற்போது ஆட்சி அமைந்துள்ள அரசு முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்காது. நாளைவரை இந்த அரசு தொடருமா என்பதே சந்தேகமே என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விவரம்> > முதல்வர் பதவியில் பழனிசாமி நீடிப்பது கேள்விக்குறியே: பொன்.ராதாகிருஷ்ணன்

10.45 am: நாளை( சனிக்கிழமை) நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்றும், திமுக ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும். அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கொறடா விஜய தாரணி தெரிவித்துள்ளார்.

10.40 am: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்று(சனிக்கிழமை) மாலை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.30am: திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

முந்தைய செய்திகள்

தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவி யேற்றார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட் டையன் உட்பட 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விவரம்> >செங்கோட்டையன் உள்ளிட்ட 30 அமைச்சர்களுடன் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு

மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பேரணி நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம்> >அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவு எடுக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பேரணி: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமைச்சரவையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு 5 ஆண்டு களுக்குப் பிறகு, அதிமுக அமைச் சரவையில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. விவரம்> >5 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற்ற செங்கோட்டையன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டை யன் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் கூவத்தூர் விடுதியிலேயே தங்கியதாக அதிமுக வட்டாரங களில் கூறப்படுகிறது. விவரம்> >கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்க வைப்பு? - சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்

அமைச்சரவையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு 5 ஆண்டு களுக்குப் பிறகு, அதிமுக அமைச் சரவையில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. விவரம்> > 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற்ற செங்கோட்டையன்

தமிழக மக்கள் மீது தேர்தலை திணிக்க முயன்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுகவின் சதி முறிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.விவரம்> >தேர்தலை திணிக்க முயன்ற ஓபிஎஸ், திமுக சதி முறியடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான புதிய அமைச்சரவை பதவி யேற்பு விழாவில் பங்கேற்பதற் காக கூவத்தூர் தனியார் விடுதி யில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். விவரம்> >பதவியேற்பு விழாவில் எண்ணப்பட்ட எம்எல்ஏக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x