Published : 20 Apr 2016 08:30 AM
Last Updated : 20 Apr 2016 08:30 AM

பாஜக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து முன்னாள் அமைச்சரின் மருமகன் போட்டி

சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் போட்டியிடும் வேட் பாளர்களின் இறுதி பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.

கடந்த மார்ச் 25-ம் தேதி 54 தொகு திகளுக்கான முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதுவரை 167 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகத்தின் மருமகன் எம்.என்.ராஜா (56) போட்டி யிடுகிறார். தருமபுரி மாவட்டம் பாலக் கோட்டில் பிறந்த இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். மனைவி பாவைமலர். 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

பாஜக மாநில அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தலைவராகவும், சென்னை துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினராகவும் இருக்கிறார். முதல் முறையாக தேர்த லில் போட்டியிடுகிறார்.

திமுக பொருளாளர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் (45) களமிறக்கப்பட்டுள்ளார். வழக்கறி ஞரான இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவிலில் பிறந்த வர். 1996 மக்களவைத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டி யிட்டவர். தற்போது 4-வது முறையாக தேர்தலில் போட்டி யிடுகிறார்.

167 வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே பெண்கள். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x