Published : 07 Sep 2015 08:32 PM
Last Updated : 07 Sep 2015 08:32 PM

பள்ளி மாணவர்களுக்கான கடிதப் போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய அஞ்சல் வார கொண்டாட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு கடிதப் போட்டி அனைத்து அஞ்சல் பிரிவு தலைமையகங்களிலும் அக்டோபர் மாதத்தில் நடக்கவுள்ளது. இந்தக் கடிதப் போட்டி 1 முதல் 5-ம் வகுப்பு மற்றும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

‘எனது விடுமுறையை எப்படி கழிப்பேன்’, ‘எனது பள்ளியில் ஒரு நாள்’, ‘எனக்கு பிடித்தமான புத்தகம்’ ஆகிய மையக் கருக்களை கொண்டு கடிதங்களை எழுதலாம். எழுதப்படும் கடிதங்கள் தாத்தா பாட்டிகளுக்கு அனுப்பப்படும். எனவே, தாத்தா பாட்டிகளின் முகவரிகளையும் சேர்த்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு அஞ்சல் பிரிவிலும் தேர்வு செய்யப்படுகிற முதல் 3 பேரின் கடிதங்கள் மாநில அளவிலும் பின்னர் தேசியளவிலும் திருத்தலுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு தக்க பரிசுகள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகலாம்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x