Published : 21 Feb 2016 08:56 AM
Last Updated : 21 Feb 2016 08:56 AM

‘நீர்வழி’ இணைப்பு இயக்கம் சார்பில் ‘சென்னையை மீட்போம்’2 நாள் கருத்தரங்கு தொடக்கம்

எஸ்பிஐஓஏ கல்வி அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்புகள் உள்ளடங்கிய ‘நீர்வழி’ இணைப்பு இயக்கம் சார்பில் ‘சென்னையை மீட்போம்’ என்ற தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கம் சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கை பாடகர் டி.எம்.கிருஷ்ணா தொடங்கிவைத்தார்.

இதையொட்டி, சுற்றுச்சூழல் தொடர்பாக எஸ்பிஓஏ பள்ளி மாண வர்கள் உருவாக்கிய படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சியை நடிகை ரோகிணி திறந்துவைத்து பேசிய தாவது:

சென்னை சேத்துப்பட்டில் என் வீடு அருகே வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். என் தோழிகளையும் இந்த பணியில் ஈடு படுத்தினேன். பல்வேறு நடிகர்கள் தனித்தனியே நிவாரண உதவிகளை செய்து வந்தனர். பின்னர் விஷால் மூலமாக அனைவரையும் ஒருங் கிணைத்து, நடிகர் சங்கம் சார்பில் நிவாரணப் பணியில் ஈடுபட்டோம்.

அரசிடம் உள்ள பணம், நம் வரிப்பணம். அதை நிர்வகிக்கத்தான் ஆட்சியாளர்கள் உள்ளனர். நாம் உருவாக்கும் திட்டத்தை அரசிடம் அளித்து, அதை நிறைவேற்ற அறிவுறுத்துவோம். நிச்சயம் நிறைவேற்ற வைப்போம்.

இவ்வாறு ரோகிணி கூறினார்.

எஸ்பிஐஓஏ கல்வி அறக்கட்டளை செயலர் டி.தாமஸ் பிராங்கோ பேசும் போது, ‘‘கருத்தரங்கு மூலமாக ஒரு மாற்று திட்டத்தை தயாரித்து அரசிடம் கொடுக்க இருக்கிறோம். மக்களும், அரசும் இணைந்தால் கட்டாயம் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும். அதே நேரம், அரசு தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டவும் நீர்வழி அமைப்பு தயங்காது’’ என்றார்.

சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் பேசும்போது, ‘‘மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, நிலத் தேவை அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டதால், வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. நகர்ப்புற வளர்ச்சி அவசியம் என்றாலும்கூட, நம்மிடம் இருக்கும் இயற்கை வளத்துக்கு மிகாமல் அது இருக்க வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் எஸ்பிஐஓஏ கல்வி அறக்கட்டளைத் தலைவர் அ.கிருஷ் ணன், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப் பின் சுந்தர்ராஜன், அகரம் அறக்கட் டளையை சேர்ந்த ஞானவேல், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், கணிதவியல் ஆராய்ச்சியாளர் ராமானுஜம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் சோ.மோகனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x