Published : 30 Nov 2016 08:53 AM
Last Updated : 30 Nov 2016 08:53 AM

நீதிமன்றங்களில் குண்டு வைத்த 5 பேர் கைது: தேசிய புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை

பெங்களூரூ அழைத்து செல்லப்பட்டனர்



மைசூரு உட்பட தென் மாநிலங்களில் உள்ள 5 நீதிமன்ற வளாகங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த 5 பேரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேல் விசாரணைக் காக பெங்களூரூ அழைத்துச் சென்றனர்.

ஆந்திராவில் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வாகன காப்பகத்தில் 7.4.2016-ல், கேரளாவில் கொல் லம் தலைமை குற்றவியல் நீதி மன்ற வாகன காப்பகத்தில் 15.6.2016-ல், கர்நாடகா மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில் 1.6.2016-ல், ஆந்திராவில் நெல்லூர் நீதிமன்றத் தில் 12.9.2016-ல், கேரளாவில் மல்லபுரம் நீதிமன்ற கழிப்பறையில் 1.11.2016-ல் என அடுத்தடுத்து தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்ப வங்கள் நடந்தன. மைசூரு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினர்(என்ஐஏ) விசாரணை நடத் தியபோது, அனைத்து வெடிகுண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும், அதே குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மதுரையைச் சேர்ந்த சிலர் சதிச் செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது.

மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சயீத் முகமது அப்துல்லாவின் மகன் சுலை மான்(23) சென்னையில் உள்ள ஐடி நிறுவன ஊழியர். குண்டு வெடிப்பு பின்னணியில் தொழில்நுட்பப் பிரிவு தலைவனாக செயல்பட்டதும், இவர் உட்பட மதுரையைச் சேர்ந்த 5 பேர் இந்த சதியில் ஈடுபட்டதும் தெரிந்தது. என்ஐஏ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சென்னை, மதுரையில் முகாமிட்டனர். சுலை மானை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மதுரையில் பல இடங்களில் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதில் மதுரை இஸ்மாயில்புரம் நயினார் முகமது மகன் அப்பாஸ் அலி(27), புதூர் விஸ்வநாதநகர் ராமுகொத்தனார் காம்பவுண்டைச் சேர்ந்த முகமது ஜைனுல்லாபுதின் மகன் சாம்சம் கரிம்ராஜா, மதுரை திருப்பாலை ஐஸ்லாண்ட் நகர் முகமது தஸ்லிம் மகன் முகமது அயூப் அலி(25), நெல்பேட்டையைச் சேர்ந்த கருவா சம்சு(24) ஆகியோரை பிடித்தனர். 8-ம் வகுப்பு படித்துள்ள அப்பாஸ் அலி ‘தருள் ஐஎல்எம்’ என்ற பெயரில் நூலகம் நடத்தி வருகிறார். பி.காம் பட்டதாரியான சாம்சம் கரிம்ராஜா கன்னிமார் கோயில் அருகே கோழிக்கறிக் கடை வைத்துள்ளார். 4 பேரையும் மதுரை அருகே இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

மதுரையில் தயாரிக்கப்பட்டவை

இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவோரை எச்சரிக்கவும், போலீஸாரின் கவனத்தை திசை திருப்பவும், ‘ஹீரோக்கள்’ போன்று செயல்படவும் இதுபோன்ற சதியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்தும் மதுரையில் தயாரிக்கப்பட்டவை. சித்தூர் சம்பவத்தை வெற்றிகரமாக நடத்தி யதும், தொடர்ந்து நீதிமன்றங்களை மட்டுமே குறிவைத்து குண்டு வைத் துள்ளனர். இதிலும் குறைந்த சக்திவாய்ந்த, உள்ளூரில் கிடைக் கும் வெடிமருந்துகளை பயன் படுத்தி தயாரிக்கப்பட்ட குண்டு களையே பயன்படுத்தியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நடந்த இடங் களின் போட்டோக்கள், துண்டுப் பிரசுரங்கள், லேப்டாப், செல்போன் கள், சிம்கார்டுகள் என ஏராளமான பொருட்களை கைப்பற்றினர்.

அல்-காய்தா தீவிரவாத அமைப் பின் அடிப்படைவாத அமைப்பான ‘தி பேஸ் மூவ்மென்ட்’ என்ற பெயரி லேயே இவர்கள் புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர். இதன் தலைவ ராக சுலைமான் செயல்பட்டுள்ளார். இந்த 5 பேரும் சுற்றுலா செல்வதாகக் கூறி குண்டு வைத்துவிட்டு வந்த தால் யாருக்கும் சந்தேகம் வராத படி நடந்துகொண்டுள்ளனர். மதுரையில் தீவிரவாதம் தொடர் பான வழக்குகளில் சிக்கியுள்ள அமைப்பினருடன் தொடர்பு இல்லாமல் இருந்ததால் உள்ளூர் போலீஸாருக்கு இவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

குண்டு வெடிப்புகளை வெற்றி கரமாக நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட 22 தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டுவது, அல்-காய்தா போன்ற தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகொள்வது குறித்தும் 5 பேர் தீவிரமாக ஆலோசித்துள்ளது உட்பட பல முக்கிய தகவல்கள் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரையில் கைதான 4 பேரையும் என்ஐஏ எஸ்பி பிரதீபா அம்பேத்கர் நேற்று மேலூர் குற்றவியல் நீதி மன்றத்தில், ஆஜர்படுத்தினார். சுலைமான் சென்னை சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார். அனைவரையும் பெங்க ளூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வும், காவலில் எடுத்து விசாரிக்க வும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x