Published : 06 Oct 2015 07:33 AM
Last Updated : 06 Oct 2015 07:33 AM

நடிகர் சங்கத் தேர்தலில் வேட்பு மனுக்கள் ஏற்பு: 8-ம் தேதி இறுதிப் பட்டியல்

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது. மனுக்களை வாபஸ் பெறு வதற்கான அவகாசம் முடிந்த பிறகு, வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் வரும் 18-ம் தேதி நடக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன.

வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர் விவரம் வெளியிடப் பட்டுள்ளது.

சரத்குமார் அணி

தலைவர் பதவிக்கு சரத் குமார், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்எஸ்ஆர் கண்ணன் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்களாக அசோக், டி.பி.கஜேந்திரன், இசையரசன், ஜெயமணி, கே.என்.காளை, எஸ்.பி.கலை மணி, எம்எஸ்கே குமரன், முகமது மஸ்தான், மோகன் ராமன், நளினி, நிரோஷா, பார்வதி, பழனிச்சாமி, ராஜன், எம்.ராஜேந்திரன், ஆர்.ராஜேந்திரன், ஆர்.ரவிக்குமார், ராம்கி, சாந்தகுமார், ‘பசி’ சத்யா, செல்வராஜ், பவன், ஜாக்குவார் தங்கம், வீரமணி போட்டியிடுகின்றனர்.

நாசர் அணி

தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களாக ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, ராஜேஷ், கோவை சரளா, பூச்சி முருகன், சிவகாமி, எம்.பி.விஸ்வநாதன், காமராஜ், காளிமுத்து, பசுபதி, நந்தா, ஸ்ரீமன், ரமணா, உதயா, சங்கீதா, விக்னேஷ், தளபதி தினேஷ், சோனியா போஸ் வெங்கட், பிரசன்னா, ரத்னப்பா, ஜெரால்டு மில்டன், பிரேம்குமார், பாலதண்டபாணி, அயூப் ஆகிய 24 பேர் போட்டியிடுகின்றனர்.

போட்டியில் இருந்து விலக விரும்புபவர்கள் 7-ம் தேதி (நாளை) மனுக்களை வாபஸ் பெறலாம். வேட்பாளர் இறுதிப் பட்டியல் 8-ம் தேதி வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x