Published : 29 Jul 2016 05:08 PM
Last Updated : 29 Jul 2016 05:08 PM

தேமுதிக மகளிரணி செயலாளர் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக மகளிரணி செயலாளராக மாலதி வினோத்தை நியமிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தேமுதிக மகளிரணிச் செயலாளராக மாலதி வினோத் நியமிக்கப்படுகிறார். இவருக்கு தேமுதிக மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, மகளிர் அணி மற்றும் கட்சியின் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

தேமுதிக மகளிரணி செயலாளராக இருந்த சிவகாமி முத்துக்குமார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருப்பதால், புதிய மகளிரணிச் செயலாளரை விஜயகாந்த் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x