Published : 16 Jun 2016 08:56 AM
Last Updated : 16 Jun 2016 08:56 AM

தேமுதிகவில் நால்வர் அணி வேண்டாம்: விஜயகாந்திடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

தலைமைக்கு அடுத்த அதிகார மையமாக இயங்கி வரும் நால்வர் அணி தேவையில்லை என்று தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்திடம் கூறியுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்டவாரியாக பகுதி, கிளை, வட்டச் செயலாளர்களுடன் கடந்த 3 நாட்களாக ஆலோசனை செய்து வருகிறார். தேமுதிகவுக்கு இருந்த வாக்கு வங்கி சரிந்ததற் கான உண்மையான காரணத்தை அறிவதற்காக அவர், ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படு கிறது.

இதுவரை, சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தரும புரி, மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த 14-ம் தேதி வரை ஆலோ சனை நடத்திய விஜயகாந்த், நேற்று மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்தக் கூட்டத்தில் தலைமைக்கு அடுத்த நிலையில் உள்ள சுதீஷ், பார்த்தசாரதி, இளங் கோவன், நல்லத்தம்பி அடங்கிய நால்வர் அணி அதிகாரம் செலுத்தக் கூடாது என்று நிர்வாகி கள் கூறியதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன. இந்த ஆலோச னைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தல் தோல் விக்கு தனித்து நிற்காததுதான் காரணம். ம.ந. கூட்டணியுடன் தேர் தலை சந்தித்ததால் அதிமுகவுக்கு சாதகம் செய்வதாக மக்கள் கருதினர். பாஜகவுடனாவது கூட் டணி அமைத்திருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்.

இது மட்டுமன்றி, வாக்கு வங்கி குறையக் காரணம், தேமுதிக தொண்டர்கள் பலரின் அதிருப்தி தான். தலைமையை அணுக முடிவதில்லை. ஏதாவது மாநாடு, பொதுக்கூட்டம் என்று வந்தால் கூட ஏதோ விரோதிகளை விரட்டுவது போல் தொண்டரணியினர் தூரத்தி லேயே நிறுத்தி விடுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தலை மைக்கு அடுத்த அதிகார மைய மாக இருக்கும் நால்வர் அணி, தொண்டர்களின் உழைப்பை தலை மையிடம் சேர்ப்பதில்லை. எனவே, தலைமையே நேரடியாக அடிப் படை நிலை நிர்வாகிகளுடன் கருத்துகளை பரிமாறிக்கொண் டால் கட்சி உயிர்ப்புடன் இருக்கும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பேசிய விஜய காந்த், ‘‘மக்கள் நலனுக்காக மட்டுமே மக்கள் நலக் கூட்டனியில் இணைந்தோம். கூட்டணி பற்றி கவலைப்படாமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலையை இப்போதே ஆரம்பியுங்கள். இனி அடிக்கடி உங்களைச் சந்திப்பேன். உங்கள் ஆலோசனைகள் குறித்து விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x