Published : 13 Jan 2017 10:22 AM
Last Updated : 13 Jan 2017 10:22 AM

‘தி இந்து’ குழுமம், தன்னார்வ அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி சென்னையில் நாளை தொடக்கம்

‘வார்தா’ புயலால் கடுமையாக பாதிக் கப்பட்ட சென்னை மாநகரம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை இழந் துள்ளது. இதனால் சென்னை மாநகரின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு களை குறைக்கும் வகையில் ‘தி இந்து’ குழுமம் ‘பசுமை சென்னை’ என்ற கருப் பொருளை உருவாக்கியுள்ளது. அதன் மூலமாக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சென்னையில் மரக்கன்று களை நடும் பணியிலும் பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது சிடிசி ஐந்திணை மற்றும் ஈஷா அறக்கட்டளை யுடன் இணைந்து சென்னை நகரில் நாளை முதல் 16-ம்தேதி வரை மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொள்ள இருக் கிறது. சிடிசி ஐந்திணை அமைப்புடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணி மகாலிங்கபுரத்தில் நாளை (14-ம் தேதி) காலை 6 முதல் 8.30 மணி வரையும் (தொடர்பு எண்கள்: 7299518047, 9962929127), மரக்கன்று பராமரிப்பு பணி சைதாப்பேட்டையில் 15-ம் தேதி காலை 6 முதல் 9 மணி வரையும் (தொடர்பு எண்கள்:9498031934, 9894122754) நடைபெற உள்ளது.

அதேபோல ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஜனவரி 14 முதல் 16-ம் தேதி வரை தினமும் காலை 9.30 முதல் இரவு 7 மணி வரை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியிலும் (சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் ஹால்) நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள தன்னார் வலர்கள் மேலே குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x