Published : 10 Jul 2016 11:46 AM
Last Updated : 10 Jul 2016 11:46 AM

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியை சரமாரியாக தாக்கிய போலீஸார்: ஊருக்கு செல்லும்போது பேருந்தில் பனிக்குடம் உடைந்தது

திருவல்லிக்கேணி அரசு மருத் துவமனையில் நிறைமாத கர்ப் பிணி மற்றும் அவரது கணவரை போலீஸார் அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் பனிக்குடம் உடைந்த தால் அவர் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (35). இவரது மனைவி முத்தாம்பிகை (31). இவர்களுக்கு முத்தமிழரசி என்ற 2 வயது மகள் உள்ளார். திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் முத் தாம்பிகை சட்டம் படித்து வந்தார். அங்கேயே தமிழரசும் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2-வது பிரசவத்துக்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று பகல் 12 மணியளவில் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு வெளியே குழந்தை முத்தமிழரசியுடன் தமிழரசு அமர்ந் திருந்தார். அப்போது குழந்தை விடாமல் அழுதுள்ளது. அங்கி ருந்த 3 பெண் போலீஸார் இதைப் பார்த்து, ‘குழந்தையின் அழுகையை நிறுத்து. இல்லை யென்றால் குழந்தையை வெளியே தூக்கிச் சென்றுவிடு’ என்று கூறியுள்ளனர். அதற்கு தமிழரசு, ‘குழந்தை அழுகையை நிறுத்த மாட்டேன் என்கிறது’ என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண் போலீஸார், ‘போலீஸையே எதிர்த்து பேசுகிறாயா’ என்று கூறி தமிழரசுவிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். தகாத வார்த் தைகளால் திட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வார்டில் இருந்து வெளியே வந்த முத்தாம்பிகை, கணவரிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று பெண் போலீஸாரிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பெண் போலீஸாரும் நிறைமாத கர்ப்பிணியான முத்தாம்பிகை மற்றும் அவரது கணவர் தமிழரசு ஆகியோரை அடித்து உதைத்துள் ளனர். மேலும் முத்தாம்பிகையின் வயிற்றில் காலால் எட்டி உதைத் தனர். அதன்பின் மருத்துவமனை யில் உள்ள காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்துச் சென்று 3 பெண் போலீஸார் மற்றும் 2 ஆண் போலீஸார் சேர்த்து அடித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து திருவல்லிக்கேணி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனை வளாகத்தில் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியின் காலில் விழுந்த முத்தாம்பிகையும், தமிழரசும், “நாங்கள் ஒரு தவறும் செய்ய வில்லை. எங்களை போலீஸார் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைக்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொய் வழக்கு களை போட்டு கைது செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று அழுதனர்.

அவர்களை சமாதானப் படுத்திய முத்துவேல்பாண்டி, தவறு செய்த போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து “இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவே பயமாக இருக்கிறது. நாங்கள் ஊருக்கே செல்கிறோம்” என்று கூறிய தமிழரசு, மனைவி முத்தாம்பிகையை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

பெண் குழந்தை பிறந்தது

பேருந்தில் சென்றுகொண்டி ருந்த போது போரூர் அருகே முத்தாம்பிக்கை திடீரென்று வலியால் துடித்தார். அவருடைய பனிக்குடம் உடைந்தது. இதைப் பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தை நிறுத்திய பொதுமக்கள் ஆம்புலன்ஸில் இருவரையும் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதுபற்றி தமிழரசுவிடம் கேட்டபோது, “எனது மனைவிக்கு இது 10-வது மாதம். வரும் 24-ம் தேதி குழந்தை பிறக்கும் என்று திருப்பதியில் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் குழந்தை பிறந்தால் உதவித் தொகை கிடைக்கும் என்பதால், சென்னைக்கு அழைத்து வந்து இந்த மருத்துவமனையில் அனு மதித்தேன். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. என்னையும், எனது மனைவியையும் அடித்து உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைவிக்கு பனிக்குடம் உடைந்து விட்டதால், இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக் கிறேன். செலவுக்குக்கூட பணம் இல்லை. என்ன செய்யப் போகிறேன் என்று தெரிய வில்லை”என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x