Published : 10 Mar 2014 01:39 PM
Last Updated : 10 Mar 2014 01:39 PM

திமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்: கருணாநிதி அறிவிப்பு

திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் பட்டியலை கட்சித் தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் 3 டாக்டர்கள், 13 வழக்கறிஞர்கள் மற்றும் 2 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும் (சிதம்பரம், திருவள்ளூர்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (வேலூர்), மனிதநேய மக்கள் கட்சி (மயிலாடுதுறை), புதிய தமிழகம் (தென்காசி) ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள புதுவை உள்ளிட்ட 35 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி, திங்கள்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

திமுக வேட்பாளர் பட்டியலில் உமாராணி (சேலம்), பவித்திரவள்ளி (ஈரோடு) என்ற 2 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இருவரும் பட்டதாரிகள். மொத்தம் 13 வழக்கறிஞர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலிதொகுதி வேட்பாளர் தேவதாஸ சுந்தரம் பொறியியல் பட்டதாரி. விழுப்புரம் முத்தையன், திருப்பூர் செந்தில்நாதன், கடலூர் கொ.நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோர் டாக்டர்கள். பெரம்பலூர் பிரபு மற்றும் சிவகங்கை துரைராஜ் ஆகியோர் டிப்ளமோ படித்தவர்கள். பட்டதாரிகளில் 9 பேர் முதுகலைப் பட்டமும் 6 பேர் இளங்கலை பட்டமும் பெற்றவர்கள்.

தற்போதைய எம்.பி.க்களில் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தாமரைச்செல்வன், காந்திசெல்வன், ஆ.ராசா, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி.கே.எஸ். இளங்கோவன் வடசென்னையில் இருந்து தென் சென்னைக்கும், ஜெகத்ரட்சகன் அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும், டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தஞ்சாவூருக்கும் தொகுதி மாறியுள்ளனர்.

முன்னாள் மந்திரிகளுக்கு சீட் கிடைக்கவில்லை

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மு.க.அழகிரி, அவரது ஆதரவாளர்களான நெப்போலியன், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் தஞ்சாவூர் தொகுதி எம்.பி.யான பழனிமாணிக்கம் ஆகியோருக்கு சீட் கிடைக்கவில்லை. இவர்களில் அழகிரி, நெப்போலியன், பழனிமாணிக்கம் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள் விபரம்:

தென் சென்னை: டி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய சென்னை: தயாநிதி மாறன்

வட சென்னை: இரா. கிரி ராஜன்

ஸ்ரீபெரும்புதூர்: எஸ்.ஜெகத் ரட்சகன்

காஞ்சிபுரம் (தனி)- ஜி.செல்வம்

அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ

கிருஷ்ணகிரி- பி. சின்ன பில்லப்பா

தர்மபுரி- இரா. தாமரைச் செல்வம்

திருவண்ணாமலை- சி.என் .அண்ணா துரை

ஆரணி- ஆர்.சிவானந்தம்

விழுப்புரம் (தனி)- கோ.முத்தையன்

கள்ளக்குறிச்சி- இரா. மணிமாறன்

சேலம்- செ.உமாராணி

நாமக்கல்- செ.காந்தி செல்வம்

திருநெல்வேலி- சி.தேவதாஸ சுந்தரம்

தூத்துக்குடி- பெ .ஜெகன்

கன்னியாகுமரி- எப்.எம்.ராஜரத்தினம்

ஈரோடு- பவித்திரவள்ளி

திருப்பூர்- செந்தில்நாதன்

நீலகிரி (தனி)- ஆ.ராசா

கோவை- கி.கணேஷ்குமார்

பொள்ளாச்சி- பொங்கலூர் நா. பழனிச்சாமி

திண்டுக்கல் - எஸ்.காந்திராஜன்

கரூர்- ம. சின்னசாமி

திருச்சி- என்.எம்.யூ. அன்பழகன்

பெரம்பலூர்- ச.பிரபு என்கிற சீமானூர் பிரபு

கடலூர்- கொ. நந்தகோபால கிருஷ்ணன்

நாகப்பட்டினம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்

தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு

சிவகங்கை- சுப துரைராஜ்

மதுரை- வ.வேலுச்சாமி

தேனி- பொன். முத்துராமலிங்கம்

விருதுநகர்- எஸ்.ரத்தினவேல்

ராமநாதபுரம்- எஸ்.முகமது ஜலீல்

புதுச்சேரி - ஏ.எம்.எஹ்.நாஜிம்

மயிலாடுதுறை- மனித நேய மக்கள் கட்சி

வேலூர்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

சிதம்பரம்- விடுதலை சிறுத்தைகள்

திருவள்ளூர் (தனி) - விடுதலை சிறுத்தைகள்

தென்காசி- புதிய தமிழகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x