Last Updated : 22 Dec, 2016 08:29 AM

 

Published : 22 Dec 2016 08:29 AM
Last Updated : 22 Dec 2016 08:29 AM

தலைமைச் செயலகத்தில் 5 மணி நேரம் சோதனை: அதிகாரிகள் வேதனை

சென்னை தலைமைச் செயலகத் தில் உள்ள தலைமைச் செயலா ளர் அறையில் வருமான வரித்துறை யினர் நேற்று 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.

தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவின் வீடுகள், அவரது மகன் மற்றும் உறவினர் களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்திலும் எந்த நேரத்திலும் வருமான வரித்துறை சோதனை நடக்கலாம் என்ற பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் நேற்று மதியம் 2.20 மணிக்கு 3 கார்களில் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வரு மான வரித்துறையினர் தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். 4, 6 மற்றும்10-ம் எண் நுழைவாயில்கள் வழியாக சட்டப்பேரவை வளாக கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவின் அறைக்குள் 14 பேர் 3 பிரிவாக நுழைந்தனர். உடனடியாக 2.25 மணிக்கு சோதனையைத் தொடங்கினர்.

சோதனை தொடங்கியதும், தலைமைச் செயலக வளாகத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப் பட்டனர். பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் யாரும் அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட வில்லை.

ராமமோகன ராவ் வீட்டில் இருந்து எடுத்து வந்த சில ஆவணங்களை வைத்து, அவரது அலுவலக அறையில் சோதனை செய்ததாக தகவல் வெளியாகி யுள்ளது. தலைமைச் செயலாளர் அறை மற்றும் அவரது அலுவலக அறைகளில் உள்ள கணினியின் சிபியுக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றியதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இரவு 7.35 மணிக்கு சோதனை முடிந்தது.

நாட்டிலேயே முதல்முறையாக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அறையில் வருமான வரித்துறையினர் 5 மணி நேரம் சோதனை நடத்தியது தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சில அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘இது போன்ற ஒரு சம்பவம் இங்கு நடப் பது வெட்கமாகவும், அதேநேரம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது’’ என தெரிவித்தனர்.

உதவியாளர்களிடம் விசாரணை

வழக்கமாக வருமான வரித்துறை சோதனை நடத்தும்போது சாட்சிகள் முன்னிலையில் நடக்கும். தலைமைச் செயலாளர் அலுவலகத் தில் சோதனை நடக்கும்போது அவரது நேர்முக உதவியாளர் களான சேகர், குமார் ஆகியோர் இருந்தனர். சோதனை முடிந்ததும் அவர்கள் இருவரையும் வரு மான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

76 ஆண்டில் முதல்முறை..

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, மதராஸ் மாகாணமாக இருந்தது. அப்போது 1940-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதல் தலைமைச்செயலாளராக எஸ்.வி.ராமமூர்த்தி நியமிக்கப்பட்டார். அதன்பின் தொடர்ந்து 76 ஆண்டுகள் பல தலைமைச் செயலாளர்கள் தமிழகத்தில் பணியாற்றியுள்ளனர்.

கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 9-ம் தேதி, அப்போதைய தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மாற்றப்பட்டு, முதல்வரின் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ், தமிழகத்தின் 44-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

76 ஆண்டு வரலாற்றில் நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் புகுந்து சோதனை நடத்தியுள்ளது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x