Published : 28 Jun 2016 08:56 AM
Last Updated : 28 Jun 2016 08:56 AM

தமிழ் இலக்கிய தோட்டத்தின் 16-வது விருதுகள் வழங்கும் விழா: கனடாவில் நடந்தது

கனடாவில் நடந்த தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 16-வது விருது வழங்கும் விழாவில் இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது வழங்கப்பட்டது.

கனடா நாட்டில் உள்ள தமிழ் இலக்கிய அமைப்பான தமிழ் இலக்கியத் தோட்டம், வாழ்நாள் சாதனைக்கான இயல் விருதை ஆண்டுதோறும் வழங்கி வரு கிறது. 16-வது விருது வழங்கும் விழா, டொரன்டோ நகரில் அண்மையில் நடந்தது. இதில், உலகளாவிய பன்மொழி கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியதற்காக இ.மயூரநாத னுக்கு வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு சுந்தர ராமசாமி, ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுஉள்ளனர்.

‘கணிமை விருது’

சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச் சுவடு அறக்கட்டளையின் ‘கணிமை விருது’, சே.ராஜாராமன் என்ற இயற்பெயர் கொண்ட நீச்சல்கார னுக்கு வழங்கப்பட்டது. இவர் இணையத்தில் தமிழ் பிழைதிருத் தியை (வாணி, நாவி) உருவாக்கி யுள்ளார்.

புனைவு இலக்கியப் பிரிவில் ‘கண்டிவீரன்’ சிறுகதை தொகுப்புக்காக ஷோபாசக்திக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் ‘குறுக்குவெட்டுகள்’ நூலுக் காக அசோகமித்திரனுக்கும், கவிதைப் பிரிவில் ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற தொகுப்புக்காக குமரகுருபரனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மொழிபெயர்ப்புப் பிரிவில் ‘மிர்தாதின் புத்தகம்’ என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்த புவியரசுக்கும், தேவிபாரதி யின் சிறுகதைகளை ‘Farewell, Mahatma’ என்ற தலைப்பில் தமிழில் இருந்து ஆங்கிலத் தில் மொழி பெயர்த்த என்.கல்யாணராமனுக் கும் விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர் கட்டுரைப் போட்டியில் ரேணுகா மூர்த்திக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் இலக்கிய சிறப்பு விருதுகளை பிரெண்டா பெக், சோ.பத்மநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x