Published : 19 May 2017 10:12 AM
Last Updated : 19 May 2017 10:12 AM

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக உயர்வு

10-ம் வகுப்பு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%.

சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார். ரேங்க் முறை இல்லாத 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல்முறையாக வெளியிடப்பட்டது.

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர்.

2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%.

கடந்த 2015-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.9% ஆக இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு தேர்ச்சி பெற்றோர் 0.8% கூடுதலாகும்.

மாணவிகளே அதிகம்

வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 96.2%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5%. மாணவர்களை விட மாணவிகள் 3.7% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

















FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x