Published : 22 Apr 2015 08:52 AM
Last Updated : 22 Apr 2015 08:52 AM

தமிழகத்தில் முதன்முதலாக திருவைகுண்டம் செல்லும் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, பாதுகாப்புக்கு போலீஸ்: ஜாதி மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டத்தில் ஜாதி மோதல் களை தடுக்கும் வகையில், அப் பகுதிக்கு செல்லும் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டு, பாதுகாப்புக்கு போலீஸாரும் பயணிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

திருவைகுண்டம் பஸ் நிலையத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இத்திட்டம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

பகையுணர்வு இல்லாமல் மக்களை நல்வழிப்படுத்தும் வித மாக பேரூர், மூலக்கரை, பத்ம நாபமங்கலம், பொன்னாங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அப்போது, இக்கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி சென்று வரும் மாணவ, மாணவியர் பஸ்களில் பயணம் செய்யும்போது, அவர்களுக்கிடையே எழும் பிரச் சினைகளே ஜாதிய மோதல்களுக்கு காரணமாகிறது என்பது தெரிய வந்தது.

பஸ்களில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை முழுமையாக கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இப்பகுதியில் நிரந்தர அமைதி ஏற் படுத்த முடியும் என்பதும் கண்டறியப் பட்டது.

இக்கூட்டத்தில் திருவைகுண்டம் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்திலேயே முதல் முறையாக திருவைகுண்டம் பகுதிகளில் இயக்கப்படும் பஸ் களில் பாதுகாப்பு பணிக்காக காவ லர்களை நியமிக்கும் ‘பஸ் மார்ஷல்’ என்னும் முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

போலீஸ் பாதுகாப்பு

இத்திட்டத்தின்படி, போலீஸா ரும், பொதுமக்களுடன் பயணம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடு படவுள்ளனர். இதன் மூலம் பஸ் களில் ஜாதிய ரீதியிலான பாடல்கள் மற்றும் வாசகங்களை ஒலிபரப்பு செய்பவர்கள், உச்சரிப்பவர்கள் மற்றும் எழுதுபவர்களால் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும். குற்ற செயல்கள், திருட்டு, ரவுடியிசம், பெண்களை கேலி செய்தல் போன்ற வன்முறை செயல்களை கட்டுப் படுத்த முடியும். தமிழகத்திலேயே இந்தத் திட்டம் முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறது என்றார்.

தூத்துக்குடி சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கந்த சாமி, திருவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜய குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், வட்டாட்சி யர் இளங்கோ உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x