Published : 28 Apr 2016 07:34 AM
Last Updated : 28 Apr 2016 07:34 AM

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 300 கம்பெனி துணை ராணுவம் வருகை

துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு

தேர்தலை முன்னிட்டு துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. மே 1-ம் தேதி முதல் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தற்போது நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கு வதால், பணம் பதுக்கல், வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா அதிகரிக்க வாய்ப்புள்ள தால் தேர்தல் ஆணையம், கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத் தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 4-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், வருமானவரித் துறை, பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கான பணிகளை வரையறுத்தது. அன்றி லிருந்தே, வருமான வரி புலனாய்வுப் பிரிவினர் தங்கள் பணிகளை தொடங்கிவிட்டனர். தேர்தல் நெருங்கும் நிலையில் தான், அவர்களின் நடவடிக்கைகள் வெளியில் தெரியத் தொடங் கியுள்ளன.

தற்போது வீடுகளில் வருமான வரி புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஒருவர் புகார் அளித்தால், அடுத்த 2 நிமிடங் களில், பறக்கும் படை, தொகுதி பார்வையாளருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். பறக்கும் படை யினர், புகார் வந்த பகுதியை சுற்றி வளைத்து, வருமான வரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் அளிப்பர். தகவல் அடிப்படையில், அங்கு பதுக்கல் இருக்கிறதா என்பதை உறுதி செய்தபின், சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் அடிப்படையில், சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ஒரு நபர் வைத்திருந்த பையில் ரூ.50 லட்சம் கைப்பற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

பொதுமக்கள் எங்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக அறிந் தாலும் 1950 எண்ணிலோ, இணைய தளம் மூலமோ புகார் தெரிவிக்க லாம். 9444123456 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமும் புகார் அளிக்கலாம். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா மற்றும் சட்டவிரோத பணம் பதுக் கலை தடுக்க பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. முதல்முறையாக, வருமானவரி புலனாய்வுப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, வருமானவரி புலனாய்வுப் பிரிவினருடன், வருவாய்த்துறை, காவல்துறை, பறக்கும் படையினர் என 4 குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இது தவிர, துறைமுகங்களில் சுங்கத் துறையின் நுண்ணறிவு பிரிவினர் முதன்முதலாக கண் காணிப்புக்காக பணியமர்த்தப் பட்டுள்ளனர். கடந்த தேர்தல்களில் சென்னை விமான நிலையத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு பிரிவினர், சுங்கத்துறை, கலால் வரித் துறையினர் கண்காணித் தனர். தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலை யங்களும், 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படு கிறது.

ரயில்வே போலீஸார் அவ்வப் போது ரயில் நிலையங்கள், ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தகவல் அடிப்படை யில், கடந்த 2 தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இரவு 1 மணிக்கு நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால், எதுவும் சிக்கவில்லை. ரயில் நிலையங்களில் ரகசிய கேமரா பதிவுகள் அனைத்தும், தேர்தல் ஆணையத்துக்கு அனுப் பப்படுகின்றன. பேருந்து நிலையங் களில் ஐபி கேமராக்கள் மூலம் நிகழ்வுகள் பதிவு செய்யப்படு கின்றன.

தற்போது வரை தமிழகத்தில் ரூ.61 கோடி ரொக்கப் பணம், தங்கம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் ரூ.26 கோடியே 55 லட்சம் உரிய ஆவணங்கள் அளித்தவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் மே 1-ம் தேதி முதல் தேர்தல் பறக்கும் படையில், மத்திய அரசு அலுவலர்கள், துணை ராணுவப் படையினர் இணைக்கப்படுவர். பறக்கும் படையின் பொறுப்பாளராக பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்.

300 கம்பெனி துணை ராணுவப் படையினர் மே 1-ம் தேதி முதல் தமிழகம் வருகின்றனர். தற்போது மேற்கு வங்கத்தில் பணியில் இருக்கின்றனர். இவர்களில் முதல் கட்டமாக 18 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேர்தல் பறக்கும் படையில் இணைவதற் காக விமானத்தில் வருகின்றனர். மற்றவர்கள், அடுத்தடுத்து ரயில் மூலம் 7-ம் தேதிக்குள் தமிழகம் வந்து பணியில் இணைகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x