Published : 03 Dec 2015 03:09 PM
Last Updated : 03 Dec 2015 03:09 PM

செம்பரம்பாக்கம், மதுராந்தகம், வீராணம் ஏரிகளில் உபரி நீர் திறப்பு குறைப்பு; பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

செம்பரம்பாக்கம், மதுராந்தகம், வீராணம் ஏரிகளில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தது.

பூண்டி ஏரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு: கரையோரங்களில் குறைகிறது பாதிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஆதாரமாக இருப்பது புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் ஆகும். இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,053 மில்லியன் கன அடி.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 7000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து வருகிறது. கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கான பாதிப்பும் குறைந்து வருகிறது.

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு 34,887 கன அடியாக உள்ளது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் 33.5 அடி. நீர் இருப்பு 2,669 மில்லியன் கனஅடி.

பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 36,484 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு

மதுராந்தகம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 28 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 8,999 கனஅடி. அணையின் நீர்மட்டம் 93.31 அடி. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 700 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 11.30 அடி. நீர்வரத்து 2080கன அடி. இதிலிருந்து வி.என்.எஸ்.எஸ். மதகுக்கு 1080 கன அடி நீரும், சென்னை குடிநீருக்கு 40 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

கீழணைக்கு வரும் 5100 கன அடி நீர் அப்படியே கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.

அமராவதி ஆற்றில் நீர்வடத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், கரூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x