Published : 11 Feb 2017 08:31 AM
Last Updated : 11 Feb 2017 08:31 AM

சென்னை பல்கலைக்கழக விழா மண்டபத்தில் சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் வாபஸ்: போலீஸ் பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது

சசிகலா பதவியேற்பு விழாவுக்காக சென்னை பல்கலைக்கழக நூற் றாண்டு விழா மண்டபத்தில் செய் யப்பட்டுவந்த அரங்க வடிவமைப்பு களைப் பிரிக்கும் பணிகள் தொடங் கியுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் முழுமையாக விலக்கப்பட்டுள்ளது.

கடந்த 5-ம் தேதி சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் முதல்வராகப் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் 6-ம் தேதி காலை முதலே தொடங்கப்பட்டன.

சென்னை பல்கலைக்கழக நூற் றாண்டு விழா மண்டபத்தில் மேடை அரங்க அமைப்பு, இருக்கைகள், வெளியில் கட்சியினர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்ட திரை உள்ளிட்ட அனைத்து ஏற் பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. கட்டிடத்தின் வெளிப்பகுதியில் அலங்கார மின்விளக்குகள் பொருத் தப்பட்டன. சாலையோரத்தில் தடுப் புகள் அமைக்கப்பட்டன. பாதுகாப் புக்கு போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவ் வருகை ரத்தானதால், போலீஸார் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பதவியேற்பு விழா 9-ம் தேதி நடக்கலாம் என்ற அடிப்படையில் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி ஆகியோர் 2 முறை வந்து விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

இந்தச் சூழலில், சசிகலா தலைமைக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணி அமைத்ததைத் தொடர்ந்து, அரசியல் காட்சிகள் தலைகீழாக மாறின. முதல் வரும், சசிகலா வும் தனித் தனியே ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர். அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சென்னை பல் கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் பகுதியில் நிறுத்தப்பட்ட போலீஸார் முழுமையாக நேற்று காலை வாபஸ் பெறப்பட்டனர். அமைச்சர்களுக்காக அரங்கத் துக்கு கொண்டுவரப்பட்ட இருக்கை கள் மீண்டும் தலைமைச் செயலகத் துக்கே திரும்பவும் கொண்டு செல் லப்பட்டன. அரங்க வடிவமைப்பு களை அகற்றும் பணிகளும் தொடங் கப்பட்டன.

இதுபற்றி கட்சி வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘ஒருவேளை ஆட்சிய மைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், ராஜ்பவனில் எளிமை யாக விழாவை நடத்தலாம் என நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். அதனால்தான் விழா ஏற்பாடுகள் நிறுத்தப் பட்டு, அரங்க வடிவமைப்பு பிரிக்கப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x