Published : 07 Nov 2014 09:58 AM
Last Updated : 07 Nov 2014 09:58 AM

சென்னையில் 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்

கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சென்னையில் நேற்று திருமணம் நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில சமூகநலத் துறை அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பின் சார்பாக இந்த ஆண்டு 10 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், அவர்களில் 116 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் களுக்கு சென்னையில் ஒரே இடத்தில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த திருமணத்தில் அவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி கள் கூட்டமைப்பின் செயலாளர் டி. மகேஸ்வரி கூறும்போது, “திருமணத்துக்கு தேர்வு செய் யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப வாழ்க்கையை நடத்த தேவையான மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து அறிந்துகொள்ள கலந்தாய்வு, மனோதத்துவம், மருத்துவ பரிசோதனை மற்றும் சட்ட ஆலோசனை ஆகியவை நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு திருமணம் செய்துவைக்கப் பட்டுள்ளது” என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த சுரேஷ், மீனா தம்பதியினர் இந்த திருமணம் பற்றி கூறும்போது, “பல கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறோம். நடக்க முடியாத நாங்கள் வாழ்க்கை ஓட்டத்தை தன்னம்பிக்கையுடன் சந்திக்க ஒன்றிணைந்து இருக்கிறோம்” என்றனர்.

ஸ்ரீகீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னை கோபாலபுரத்தில், 58 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x