Published : 20 Sep 2016 09:09 AM
Last Updated : 20 Sep 2016 09:09 AM

சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார்

சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக் கப்படுகின்றன. இந்நிலையில் சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஒப்புதல் அளித் தார். இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை வரும் 21-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரு கின்றன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

ஒப்புதல் அளிப்பு

சென்னையில் சின்னமலை - ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் (11 கி.மீ) இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. 9 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதையை ஆய்வு செய்தும், 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்தும் இந்த ரயில் சேவையை தொடங்க ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சின்னமலை விமான நிலை யம் இடையே வரும் 21-ம் தேதி (நாளை) முதல்வர் ஜெய லலிதா, காணொலிகாட்சி மூலம் மெட்ரோ ரயில்சேவையை தொடங்கி வைக்கிறார். விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார். தொடக்க விழாவுக் கான பணிகள் தற்போது, நடைபெற்று வருகின்றன.

ரூ.50 கட்டணம்

மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது, சராசரி யாக 10 ஆயிரமாக இருக்கிறது. இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களைறஇயக்கும்போது இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். சென்ட்ரல், எழும்பூர், பரங்கி மலை போன்ற முக்கிய பகுதி களை இணைக்கும்போது பயணி களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க் கிறோம்.

0 - 2 கி.மீ ரூ.10, 2 4 கி.மீ ரூ.20, 4 6 கி.மீ ரூ.30, 6 10 கி.மீ ரூ.40, 10 15 ரூ.50, 15 20 கி.மீ ரூ.60, 20 50 கி.மீ ரூ.70 என மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். எனவே, விமான நிலையத்தில் இருந்து சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு ரூ.50 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் இணைந்தால், மக்களின் பயணம் எளிதாக இருக்கும் என்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆலந் தூர் பரங்கிமலை இடையேவுள்ள வழித்தடத்தில் இம்மாத இறுதியில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x