Last Updated : 18 May, 2015 02:20 PM

 

Published : 18 May 2015 02:20 PM
Last Updated : 18 May 2015 02:20 PM

சதுரகிரி வெள்ள பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு: 4 அமைச்சர்கள் முன்னிலையில் மீட்புப் பணி தீவிரம்

சதுரகிரி மலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியான மேலும் 4 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. எனவே, பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள் ளது. இதையடுத்து, சதுரகிரியில் 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்துக்கும், மதுரை மாவட்டத்துக்கும் எல்லை யாக, மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதற்காக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கோடை விடுமுறை மற்றும் ஞாயிற் றுக்கிழமை என்பதால் சதுரகிரி மலைக்கு நேற்று முன்தினம் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வந்திருந்தனர்.

காலையில் தரிசனம் முடித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கியபோது, தொடர் மழையாலும், நேற்று முன்தினம் பெய்த கனமழையாலும் சதுரகிரி மலையிலுள்ள காட்டாறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கி இறந்த வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த பொன் ராஜ் (18), 50 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத நபர் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர், போலீஸார் உட்பட 400 பேர் வரை மீட்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணி வரை சுமார் 3 ஆயிரம் பக்தர் கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலையில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட் டிருந்தனர்.

நேற்று காலை வெள்ளத்தின் அளவு வெகுவாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்து காலை 7.30 மணி முதல் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, 1050 பக்தர்கள் அடிவாரப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும் 4 சடலங்கள்

வெள்ளத்தில் அடித்துச் செல் லப்பட்ட வத்திராயிருப்பு கீழத்தெரு வைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் மகன் பாஸ்கரன் (18), 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஆகியவை முதலைக்கனி ஓடையிலும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த உத யாகண்ணன் (24) சடலம் ஆலங் குளம் கண்மாயிலும் மீட்கப்பட்டன.

சதுரகிரி மலை பள்ளத்தாக்கு களில் ஒன்றான சின்ன பசுக்கரை பகுதியில் கிடந்த தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரை சேர்ந்த பட்டாளம் என்ற அனந்தப்பன் (67) சடலமும் மீட்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரவணன், புதியம்புத்தூரை சேர்ந்த குருசாமி, முப்பிடாதி ஆகியோரை போலீஸாரும், மீட்புக் குழுவினரும் தேடிவருகின்றனர்.

சதுரகிரி மலையிலிருந்து மீட் கப்பட்ட பக்தர்கள் அனைவரும், சிறப்பு பஸ்கள் மூலம் வெளியூர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்புப் பணிகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் வே.ராஜாராமன், மதுரை மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணி யன், மாவட்ட காவல் கண்காணிப் பாளர்கள் மகேஸ்வரன் (விருது நகர்), விஜயேந்திரபிதாரி (மதுரை), விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கதிரேசன் உள்ளிட்டோர் சதுரகிரி யில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

சதுரகிரி மலையில் இருந்து கீழே அழைத்துவரப்பட்ட அனைத்து பக்தர்களுக்கும் மருத்துவப் பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. வயதான பெண்கள் மற் றும் மனதளவில் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு மருத்துவக் குழு வினர் மூலம் உரிய ஆலோசனை களும் வழங்கப்பட்டன.

நேற்று பிற்பகலிலும் சதுரகிரி மலைப் பகுதியில் பலத்தமழை பெய்து கொண்டிருந்தது.

அதைத் தொடர்ந்து மே 20-ம் தேதி வரை வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x