Published : 22 Feb 2017 11:48 AM
Last Updated : 22 Feb 2017 11:48 AM

சட்டப்பேரவை நிகழ்வுகள்: திமுக புகார்களுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்

அதிமுக ஆட்சியை கவிழ்க் கும் உள்நோக்கத்துடன் சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 18-ம் தேதி காலை 11 மணிக்கு பேரவை நிகழ்வுகள் தொடங்கியதில் இருந்து பேர வையை நடத்த விடாமல் திமுகவினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். மேஜை மீது ஏறி நின்று கோஷமிட்டனர். பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அவரது சட்டையை பிடித்து இழுத்து அநா கரிகத்துடன் நடந்து கொண்டனர். பேரவைத் தலைவரின் நாற்காலி யில் அமர்ந்ததுடன் மைக்கை உடைத்தனர். மேஜை, நாற்காலியில் அமர்ந்து தொடர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனை நாட்டு மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்தனர். எனவே, யார் தவறு செய்தது என்பது மக்களுக்கும் தெரியும்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவை களில் ரகசிய வாக்கெடுப்பு நடத்து வது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது. தாங்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர் எந்த அரசை ஆதரிக்கிறார் என்பது தொகுதி மக்களுக்கு தெரிய வேண்டும். யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாவிட்டால் கொறடா உத் தரவை மீறியவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது.

ரகசிய வாக்கெடுப்பு நடத்து வது கட்சித் தாவல் தடை சட்டத் துக்கு எதிரானது. எனவே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாய மற்றது. ஒரு வாரத்துக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என சட்டப்பேரவை யில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

அதிமுக எம்எல்ஏக்களை சட்டப் பேரவைக்கு வரவிடாமல் தடுக் கவே ஸ்டாலின் ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார். அரசை காப்பாற்றும் நோக்கத்தில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்தனர். ஆட் சியை கலைக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு திமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அதனால்தான் அவர் கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், இந்த உண்மை களை மறைப்பதற்காக சட்டப் பேரவையில் நடந்தது குறித்து திட்டமிட்டு தவறான தகவல்களையும், வதந்தி களையும் பரப்பி வருகின்றனர். ஜனநாயக ரீதியில் ஆரோக்கிய மான எதிர்க்கட்சியாக திமுக செயல்படவில்லை. பேரவைத் தலைவரின் முடிவில் ஆளுநரோ, மத்திய அரசோ தலையிட முடி யாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு பண்ருட்டி ராமச் சந்திரன் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் பி.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x