Last Updated : 25 Apr, 2016 09:57 AM

 

Published : 25 Apr 2016 09:57 AM
Last Updated : 25 Apr 2016 09:57 AM

சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வழங்க நடவடிக்கை

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் னர் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிக மான ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை, கவுரவ ரேஷன் கார்டு, அரிசி ரேஷன் கார்டு, சர்க்கரை ரேஷன் கார்டு, காவலர் ரேஷன் கார்டு என 4 விதமான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், அதன்மூலமாக பொது விநியோக திட்டத்தின் பயனை உண்மையான பயனாளிகளுக்கு வழங்கி, திட்டச்செலவை குறைத் திடவும் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ நடை முறைக்கு வந்துவிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

எனினும், பழைய ரேஷன் கார்டு களில் ஆதார் எண்ணை ஒருங்கி ணைத்தல், ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்ட மென்பொருளை உருவாக்கு தல் ஆகியவற்றில் ஏற்பட்ட தாம தம் காரணமாக, திட்டம் தள்ளிப் போனது.

இதையடுத்து, ரேஷன் கார்டு களில், உள்தாள் இணைக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் வரையிலும் செல்லத்தக்கதாக மாற்றப்பட்டது. தற்போது, ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் சிலர் கூறியதா வது: ‘ஏடிஎம்’ கார்டு வடிவிலான ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ மக்களுக்கு வழங்கப்படும். ரேஷன் கடை விற் பனையாளர்களுக்கு கணினி மூலமாக இயங்கும் சிறு இயந்திரம் வழங்கப்படும். இணையதள தொடர்புடன் இயங்கும் இந்த கருவியில், ‘ஸ்மார்ட் ரேஷன் கார் டினை’ ‘ஸ்வைப்’ செய்து, பில் போடப்பட்டு, அந்த கார்டுக்கு உரிய ரேஷன் பொருட்கள் வழங் கப்படும். இதற்கான பயிற்சி ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

இயந்திரத்தில் பில் போடப்பட் டதும், அது ‘ஆன்லைன்’ மூல மாக உயர் அலுவலகங்களுக்கும், ரேஷன் கார்டுதாரரின் செல்போனுக் கும் குறுஞ்செய்தியாக அனுப்பப் படும். இதற்கென தனி ‘ஆப்ஸ்’ உருவாக்கப்பட்டு வருகிறது. பய னாளிகள், இந்த ‘ஆப்ஸ்’ மூலமாக, தனது கார்டுக்கு என்ன பொருள் பெற வேண்டியுள்ளது. ரேஷன் கடையில் உள்ள பொருளின் இருப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டத் துக்காக, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது, தேசிய மக்கள் தொகை பதிவேடு மூல மாக, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்து வது போன்ற பணிகள் தொடரப் பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளன.

சோதனை முறை

அரியலூர், பெரம்பலூர் மாவட் டங்களில் சோதனை ரீதியில் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மாதங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துவிடும். இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், புதிய ரேஷன் கார்டு கேட்டு இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க முடியும், விண்ணப்பித்த 15 நாளில் புதிய கார்டு பெற முடியும் என்று அவர்கள் கூறினர்.

‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டத்துக்காக, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது போன்ற பணிகள் தொடரப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x