Published : 10 Mar 2016 07:57 PM
Last Updated : 10 Mar 2016 07:57 PM

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் தேமுதிகதான் பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது. அது, எந்தக் கூட்டணியில் சேரும் என்று கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தன. தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை தீவிரமாக முயற்சித்தன. பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜ யகாந்தை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர். திமுக தலைவர் கருணாநிதியும் சில மாதங்களுக்கு முன்பே விஜயகாந் துக்கு பகிரங்க அழைப்பு விடுத் தார்.

கடந்த மாதம் 20-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக வின் அரசியல் திருப்புமுனை மாநாட்டில் பேசிய விஜயகாந்த், ‘‘நான் ‘கிங்’ ஆக இருக்க வேண் டுமா? ‘கிங் மேக்கராக’ இருக்க வேண்டுமா? ‘கிங்’ ஆக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். நான் ‘கிங்’காக இருந்தால் நீங்களும் ‘கிங்’காக இருப்பீர்கள்’’ என்று பேசினார்.

இதனால், தேமுதிக தலைமை யில் தனி அணி உருவாகுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும், தேமுதிக தங்கள் அணிக்கு வரும் என்று ம.ந.கூட்டணியும் பாஜகவும் சொல்லி வந்தன. இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாமல் இருந்த தேமுதிக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, கூட்டணி குறித்து யாருடனும் விஜயகாந்த் இதுவரை பேசவில்லை என்று அறிவித்தது.

இதற்கிடையே, கடந்த 8-ம் தேதி, ‘தேமுதிக கூட்டணி முடிவாகி விட்டதா’ என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, ‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது. அது பாலில் எப்போது விழும் என்பது தெரியவில்லை’ என்றார். இதனால் திமுக - தேமுதிக கூட்டணி ஏற்படும் என்றும், விரைவில் கருணாநிதியை விஜயகாந்த் சந்திப்பார் என்றும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித் துப் போட்டியிடும் என்று விஜய காந்த் அறிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டத் தில் அவர் பேசியதாவது:

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என நாள் தோறும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. திமுக வுடன்தான் சேருவார்கள், பாஜக வுடன்தான் சேருவார்கள் என பத்திரிகைகள் எழுதுகின்றன. தொலைக்காட்சிகளில் விவாதிக் கிறார்கள். அதிக தொகுதிகள் கேட்கிறார், அதிக பணம் எதிர்பார்க் கிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

எனது கட்சியை எப்படி கொண்டுசெல்ல வேண்டும், தொண்டர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். யாரும் எனக்கு அறிவுரை வழங்கத் தேவையில்லை.

வேட்பாளர் தேர்வு குழு

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். 234 தொகுதிகளுக் கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், பொருளாளர் ஏ.ஆர்.இளங் கோவன், தலைமை நிலையச் செயலாளர் பி.பார்த்தசாரதி, சேலம் மாவட்டச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன், ஆசிரியர், பட்டதாரி அணியின் செயலாளர் பேராசிரியர் ரவீந்திரன் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. தேமுதிகவை கூட்டணிக்காக அழைத்த மக்கள் நலக் கூட்டணி மற்றும் பாஜக தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்துக்கு கோர்வை யாக பேசத் தெரியவில்லை என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால், முதல்வர் ஜெயலலி தாவை விமர்சிக்க பயப்படுகி றார்கள். 110-வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்கள் என்ன ஆனது என ஊடகங்கள் கேள்வி எழுப்புவதில்லை.

இவ்வாறு விஜயகாந்த் பேசி னார்.

6 முனை போட்டி

விஜயகாந்தின் அறிவிப்பால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதிமுக, திமுக - காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக என 6 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x