Published : 19 Feb 2017 10:04 AM
Last Updated : 19 Feb 2017 10:04 AM

சசிகலா அணிக்கு வாக்களித்தவர்களை தொகுதி மக்கள் கேள்வி கேட்பது உறுதி: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்துவிட்டு, சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தது சரியா என்று, எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு திரும்பினால்தான் தெரியும். அவர்களை தொகுதி மக்கள் கேள்வி கேட்கப்போவது உறுதி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்து, பேரவையில் இருந்து வெளியே வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவை கூட்டம் தொடங் கியதும், சட்டப்பேரவை தலைவரி டம் 2 கோரிக்கைகள்தான் வைத் தோம். முதலாவதாக, ‘ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத் துள்ளார். கூவத்தூர் விடுதியில் அடைக்கப்பட்டிருந்த உறுப்பினர் களை அவரவர் தொகுதிக்கு அனுப்பி வையுங்கள். அவர்கள் தங்களுக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களை சந்திக்கட்டும். ஒரு வாரம் கழித்து பேரவையைக் கூட்டுங்கள். அதன் பிறகு, உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக் களிக்கட்டும்’ என்றோம். இரண்டா வதாக, ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள் என்றோம். நாங்கள் எவ்வளவோ சொல்லியும், வலியுறுத்தி கூறியும் பேரவை தலைவர் ஒப்புக்கொள்ளவில்லை.

பேரவை தொடங்கிய 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் பலவந்தமாகவும், காயப்படுத்தியும் ஜனநாயக மரபுக்கு விரோதமாக வெளியேற்றிவிட்டு, அதன்பிறகு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் எல்லோரும் தங்களது தொகு திக்கு திரும்பி, மக்களை சந்திக்கும்போதுதான், தாங்கள் செய்தது சரியா என்பது தெரியும். மக்களுக்கு மாபெரும் துரோ கத்தை செய்துவிட்டு நீங்கள் தொகுதிப்பக்கம் வரலாமா என்று கேட்கிற நிலை கட்டாயம் எழப்போகிறது.

ஜெயலலிதா எந்தக் குடும்பத்தை ஒதுக்கிவைத்து, தான் உயிரோடு இருக்கும் வரை அவர்களை வீட்டுக்குள்கூட நுழைய விடாமல் தடுத்து வைத்திருந்தாரோ, அந்தக் குடும்பம்தான் தற்போது சசிகலா அணியாக இருக்கிறது.

இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x