Published : 06 Apr 2017 08:47 AM
Last Updated : 06 Apr 2017 08:47 AM

கோடை வெயில் இயல்பைவிட அதிகரிக்கும்: சிக்கன், கருவாடு வேண்டாம்; தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க டாக்டர் அறிவுரை

இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதை சமாளிக்க கோடை காலத்தில், கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை காலத்தில் இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 9 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இனிவரும் நாட்களில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை கூட 82.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் புழுக்கம் நிலவவும் வாய்ப்பு உள்ளது.

இயல்பை விட வெப்பம் அதிகரிப் பதால், இந்த கோடையில் பொது மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். உடலில் அதிக நீர் இழப்பு ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுவது தொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் கூறியதாவது:

வெயிலின் தாக்கத்தால் உடலில் வியர்வை வெளியேறி வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிக் காதவர்களுக்கு சிறுநீரக கல் வரக் கூடும். உச்சி வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

தடுப்பு முறைகள்

தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண் டும். இதனால் சிறுநீர் கல் ஏற்படு வதை தடுக்க முடியும். நீர் சத்துள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற வற்றை அதிகமாக உட்கொள்ள வேண் டும். பழச்சாறு, இளநீர், மோர் பருக வேண்டும். கார்பைடு கல் வைத்து செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. முடிந்தவரை இறுக்கமான ஆடை களை தவிர்த்து, தளர்வான மெல் லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல் பவர்கள் கண்டிப்பாக தொப்பி அணிந்தோ அல்லது குடை பிடித்தோ செல்ல வேண்டும். காலணி அணியா மல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தினமும் காலை, மாலை அல்லது இரவில் குளிக்க வேண்டும்.

உணவு முறை

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி, மீன் அளவோடு சாப்பிடலாம். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு

பச்சிளம் குழந்தைகள் உட்பட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே அழைத்து செல்லக் கூடாது. வெளியே அழைத்துச் செல்ல அவசியம் ஏற்பட்டால் குழந்தைகளை துணியால் மூடித்தான் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட விடக்கூடாது.

இவ்வாறு டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் கூறினார்.

8 நகரங்களில் வெயில் சதம்

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி வேலூரில் 106.16, வேலூரில் 104, சேலத்தில் 103.1, மதுரை, திருப்பத்தூர், பாளையங்கோட்டையில் தலா 102.92, திருச்சியில் 102.02, தருமபுரியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x