Last Updated : 23 Oct, 2015 01:50 PM

 

Published : 23 Oct 2015 01:50 PM
Last Updated : 23 Oct 2015 01:50 PM

கோ-ஆப்டெக்ஸில் புதிய வகை சட்டைகளுக்கு வரவேற்பு

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சட்டைகளை தயாரித்து வெற்றிகண்ட தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு அமைப்பான கோ- ஆப்டெக்ஸ், தற்போது ஆண்களுக்கான புதிய வகை கைத்தறி சட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் கோயம்புத்தூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைத்தறி சட்டைகள், வேகமாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன. இதையடுத்து இரண்டாவது லோடு சரக்குகளும் வந்திருக்கின்றன. பண்டிகை காலம் என்பதால் இன்னும் அதிக சட்டைகள் விற்பனைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோ- ஆப்டெக்ஸின் கைத்தறி சட்டைகள் லிக்கோ என்ற பெயரில் சென்னையில் சில நாட்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், "கைத்தறி சட்டைகளுக்குத் தேவையான நூல், உள்நாட்டுக் கைத்தறி நூல் உற்பத்தி மையங்களிடம் இருந்து பெறப்படுகிறது. நம்பிக்கையான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சிறந்த, தரமான கைத்தறி நூல்கள் பெறப்படுகின்றன. அதிலிருந்து ரெடிமேட் சட்டைகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம்.

இவை சணல், நார் மூலம் உருவாக்கப்படும் கைத்தறி ஆடைகள், பருத்தி மூலம் உருவாக்கப்படும் கைத்தறி ஆடைகள் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முழுமையான கைத்தறி ஆடைகள் சுமார் 1,200 முதல் 1,400 ரூபாய் வரை, நான்கு விதமான அளவுகளில், ஆறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. காட்டன் கலந்த கைத்தறி ஆடைகள் 10 வண்ணங்களில், 800 முதல் 1000 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. அனைத்து வகையான சட்டைகளும் இந்தியா முழுக்க உள்ள அனைத்து கோ- ஆப்டெக்ஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும்" என்றார்.

கோயம்புத்தூரில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் மையம் ஒன்றின் மேலாளரான நடராஜன், "கைத்தறி ஆடைகள் விற்பனை, சிறந்த பலனை அளித்துவருகிறது. இரு வாரங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தொகுப்பு கைத்தறி சட்டைகள், வந்த வேகத்திலேயே விற்றுவிட்டன" என்றார்.

சென்னை மைய 100 புடவைகள் ஒப்பந்தக்குழு ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீமதி மோகன், "கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் என்பது புதையலின் மேல் அமர்ந்திருப்பது போன்றது; அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடந்த வருடம் 127 கோடிக்கு விற்பனை செய்த கோ- ஆப்டெக்ஸ் இந்த முறை 150 கோடியை விற்பனை இலக்காக வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x