Published : 11 Feb 2017 08:29 AM
Last Updated : 11 Feb 2017 08:29 AM

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடமாற்றமா? - அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு

கல்பாக்கத்தை அடுத்த கூவத் தூரில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுவதால் அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் மீது புகார் தெரிவித்து முதல் வர் பன்னீர்செல்வம் பேசியதை யடுத்து, அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரு கின்றன. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதற் காக, அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கம் அடுத்த கூவத்தூர் கிராமப் பகுதியில் உள்ள ‘கோல்டன் பே’ என்ற தனியார் சொகுசு விடுதியில் மூன்றாவது நாளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்த சில எம்எல்ஏக்களை, மாமல்லபுரம் அடுத்த வடநெம்மெலி மற்றும் பூந்தண்டலம் ஆகிய பகுதியில் உள்ள அக்கட்சி பிரமுகர்களின் பங்காளாக்களில் தங்க வைத்துள்ளதாக தெரிகிறது. விடுதியில் தங்கியுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் பேச் சுவார்த்தை நடத்தும் பணிகளில் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. மேலும், நேற்று முன்தினம் நள்ளிரவு 5 முக்கிய அமைச்சர்கள் சசிக லாவை ஆதரிக்கும்படி எம்எல்ஏக்களிடம் பேசியதாக வும், சில சட்டப்பேரவை உறுப் பினர்கள் அதிருப்தியில் உள்ள தாகவும் கூறப்படுகிறது.

வானூர் எம்எல்ஏ. சக்ர பாணியை நேரில் சந்தித்து பேசு வதற்காக அவருடைய உதவி யாளர்கள் மற்றும் குடும்பத்தினர், கூவத்தூர் விடுதிக்கு வந்தனர். அங்கு, விடுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது காரை வழிமறித்து திருப்பி அனுப்பினர். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற் பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் விடுதியில் இருந்த செல்போன் சிக்னல் ஜாமர் கருவி பொருத் தப்பட்ட வாகனம், சசிகலாவால் அதிமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட் டையன் வாகனம் உட்பட 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறின. எனினும், செங் கோட்டையன் மட்டும் அடிக்கடி முகத்தை மூடியவாறு விடுதிக்கு சென்று வந்தார்.

கூவத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கி யிருந்தாலும், குறைவான அளவே எம்எல்ஏக்கள் தங்கியி ருப்பதாக அதிமுக நிர்வாகி கள் தெரிவித்தனர். மேலும், அமைச்சர்களின் வீடுகளில் 30-க்கும் மேற்பட்ட எம்எல் ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும். மற்றவர்கள் பூந்தண் டலம் மற்றும் சென்னை, வட நெம்மெலி ஆகிய பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், நேற்று முன்தினத்தைவிட அதிக அளவிலான வாக னங்கள் விடுதிக்கு வந்து சென்றதால், விடுதியில் தங்கியிருந்த எம்எல்ஏக்களை வேறு இடத்துக்கு மாற்றி வருவதாகக் கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x