Published : 08 Aug 2014 10:00 AM
Last Updated : 08 Aug 2014 10:00 AM

குரூப்-1 தேர்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும்: அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

சட்டப்பேரவையில் சட்டம், வனம், சுற்றுச்சூழல், பணியாளர் நலத்துறை உள்ளிட்ட 6 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது வியாழக்கிழமை விவாதம் நடந்தது.

இதில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர். காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதாரணி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுந்தரம், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, அகில இந்திய பார்வர்டு பிளாக் உறுப்பினர் கதிரவன் ஆகியோர் குரூப்-1 வயது வரம்பை மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 50 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு, துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x