Published : 20 Dec 2016 08:21 AM
Last Updated : 20 Dec 2016 08:21 AM

குமரியில் ராமாயண தரிசன சித்திரக் கூடம்: ஜன. 12-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்

கன்னியாகுமரி, விவேகானந்த புரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடத்தை, ஜனவரி 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலை, கடலோரத்தில் அமைந்துள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம் போன்றவை சுற்றுலாப் பயணி களை கவர்ந்திழுக்கின்றன.

கன்னியாகுமரியில் மேலும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறவேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரினர். ஆன்மிக பொழுதுபோக்கு அம்சங்களையும், இயற்கை வளம் குறித்த பயிற்சி களையும் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரம் அளித்து வருகிறது. இங்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடற்கரை யில் திருப்பதி சுவாமி வெங்கடாசலபதிக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது.

அத்துடன், இந்த வளாகத்தில் 2013-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி ராமாயண தரிசன சித்திரக் கண் காட்சி அமைக்கும் பணி தொடங்கி யது. ரூ. 15 கோடி மதிப்பில், 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த சித்திரக் கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜனவரி 12-ம் தேதி காணொலி காட்சி மூலம், இக்கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

விவேகானந்தா கேந்திரா துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

இக்கண்காட்சி கூடத்தில் வால்மீகி ராமாயணத்தின் 108 முக்கிய அம்சங்களை விளக்கும் மூலிகை ஓவியங்கள் இடம்பெற்றுள் ளன. கண்காட்சியின் முகப்பில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அடி உயரத்தில் வீர அனுமனின் கருங்கல் சிலை அமைக் கப்பட்டுள்ளது.

கண்காட்சி மண்டபத்தின் மேல் மாடியில் பாரத மாதா திருக்கோயில் அமைக்கப்பட்டு பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அங்கு 15 அடி உயரத்தில் பாரத மாதாவின் பஞ்சலோக சிலை இடம்பெற்றுள்ளது.

அத்துடன் 18 அடிக்கு 12 அடி என்ற அளவில் 3 முப்பெரும் சித்திரங்களில் ராமர் பட்டா பிஷேகத்தையும், ராமரும், சீதாபிராட்டியும் சேர்ந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்யும் காட்சியும், பத்மநாப சுவாமியின் அனந்த சயனமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 அடி உயரத்தில் புதிய தலைமுறையினரிடத்தில் பாரத நாடுகண்ட தாய்மையின் பெருமையை உணர்த்தும் நற்குண வளர்ச்சிகளை சித்தரிக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சி வளாகத்தில் சிவன் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் சிலையும் தத்ரூபமாக இடம்பெற் றுள்ளது. ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சியை ஜனவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதன் பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சி அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கேந்திரா ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கண்காட்சி வடிவமைப்பாளர் பாஸ்கர் தாஸ், மக்கள் தொடர்பு அதிகாரி ரெகுநாதன் நாயர், நிர்வாக அதிகாரி அனந்த பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x