Published : 20 Sep 2015 11:08 AM
Last Updated : 20 Sep 2015 11:08 AM

காவல்துறையில் நேர்மையானவர்களை தரக்குறைவாக நடத்தும் உயர் அதிகாரிகள்: விஷ்ணுபிரியாவின் தோழி கீழக்கரை டிஎஸ்பி குமுறல்

“நேர்மையானவர்களை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகவே நடத்துகின்றனர். போலீஸ் நினைத் தால் என்ன வேண்டுமானா லும் செய்யலாம்; என்ன வேண்டு மானாலும் நடக்கும்’’ என விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டிஎஸ்பியுமான மகேஸ் வரி கூறி னார்.

தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தோழியும், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சப் டிவிஷனில் டிஎஸ்பி யாக பணிபுரியும் மகேஸ்வரி, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள விஷ்ணுபிரியாவின் உடலை பார்த்த பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

நானும், விஷ்ணுபிரியா வும் சிவகங்கையில் டிஎஸ்பியாக பயிற்சி பெற்றது முதல் நெருங்கிய தோழியாக இருந்து வந்தோம். நேற்று முன்தினம் மதியம் 2.48 மணியளவில் என்னை செல் போனில் தொடர்பு கொண்ட விஷ்ணுபிரியா, ‘விநாய கர் சிலை பாது காப்புக்கு பணிக்கு சென்றுவிட்டு இப்போதுதான் வந்தேன் என்றார். தொடர்ந்து எஸ்பி லைனில் வருவ தாக கூறி, அப்புறம் பேசுவதாக கூறி செல்போனை வைத்து விட்டார்.

அதேநாள் மாலை விஷ்ணு பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்து அதிர்ச்சி அடைந்தேன். விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை கிடையாது. அவர் துணிச் சலானவர். நேர்மையானவர். நேர் மையான அதிகாரியாக இருப்பது கடினம்.

நேர்மையானவர்களை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகவே நடத்துகின்றனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு திருப்தி அளிக்க வில்லை என்றும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் மற்றவர்களை கைது செய்து அவர்களை குண் டர் சட்டத்தில் கைது செய்ய உயர் அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வந்ததாகவும் விஷ்ணுப்பிரியா என்னிடம் கூறி வந்தார்.

நேர்மையான அதிகாரி களுக்கு இதுபோன்ற நெருக்கடி வருகிறது. இதுகுறித்து நான் உங்களிடம் சொல்லுவதால் என்னுடைய வேலைகூட போக லாம். அது பற்றி நான் கவலைப் படவில்லை. போலீஸார் நினைத் தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; என்ன வேண்டுமா னாலும் நடக்கும். நேர்மையான அதிகாரிகளின் உண்மை நிலை வெளியே தெரிய வேண்டும் என்பதாலேயே இதை கூறுகி றேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x