Published : 02 May 2016 09:35 AM
Last Updated : 02 May 2016 09:35 AM

ஏரிகளை முறையாக பராமரித்தால் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கலாம்: பேராசிரியர் ஜனகராஜன் தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங் களில் உள்ள ஏரிகளை முறையாக பராமரித்தால் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் தெரிவித்துள்ளார்.

நீர் வழி அமைப்பு சார்பில், சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், இனி வெள்ளம் வந்தால் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ‘குடிமக்கள் சாசனம்’ என்ற தொகுப்பை சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் உருவாக்கி யிருந்தார். அத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் நடிகை ரோகிணி பங்கேற்று நூலை வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.மோகனா பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேராசிரியர் ஜனக ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தால் பெருத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. சென்னை வானிலை ஆய்வு மையமும், இதுவரை இல்லாத வகையில் முதல்முறை யாக அதிகனமழை பெய்யும் என்று எச்சரித்தது. மேலும் பிபிசி மற்றும் பல்வேறு பன்னாட்டு வானிலை ஆய்வு மையங்களும் சென்னையில் அதிக மழை இருக்கும் என்று எச்சரித்தன. அந்த எச்சரிக்கைகளை நாம் மதிக்கவில்லை. அதனால் சேதம் அதிகமாக இருந்தது.

எந்த நகரத்துக்கும் இல்லாத வகையில் சென்னை, சுற்றுவட்டார பகுதிகளில் குசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் 16 பெரிய கால்வாய்கள் இடம் பெற்றுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்யும் மழை நீரும் சென்னை வழியாகத்தான் கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த நீர்வழித் தடங்கள் தொடக்கத்திலிருந்து கடைசி வரை தாழ்வாக செல்ல வில்லை. அந்த ஆறுகளில் கட்டு மானக் கழிவுகள் குப்பைகள் கொட்டப்படுவதால்தான் அவ் வாறு ஏற்பட்டுள்ளது. இதனாலும் வெள்ளம் ஏற்படுகிறது.

சென்னைக்கு ஆண்டுக்கு 20 டிஎம்சி நீர் தேவை. சேமிப்பதற் கான கட்டமைப்பு இல்லாததால் 300 டிஎம்சி வரை மழைநீர் கடலில் கலக்கிறது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு ஆவணங்களின்படி 3,600 ஏரிகள் இருந்தன. இவற்றை முறையாக பராமரித்தால் 80 டிஎம்சி வரை நீரை தேக்க முடியும். வெள்ளத்தை யும் தடுக்க முடியும். அரசானது வெள்ளத்தை, பாதிப்பாக பார்க்கா மல், கிடைக்கும் வளமாக பார்க்க வேண்டும். அதற்கான மேலாண்மை செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.தாமஸ் பிராங்கோ, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க மண்டல செயலர் டி.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x