Published : 05 Nov 2015 07:31 AM
Last Updated : 05 Nov 2015 07:31 AM

எம்.கே. நாராயணன் மீது தாக்குதல்; ஒருவர் கைது

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் தேசிய பாது காப்பு ஆலோசகர் எம்.கே.நாரா யணன் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.

‘இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ குறித்த கருத்தரங்கம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.கே.நாராயணன் பங்கேற்று உரையாற்றினார்.

இதற்கிடையே நிகழ்ச்சி தொடங் குவதற்கு முன்பாக நாராயணனுக்கு எதிராக சில அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைப் போரின் போது தமிழர் களுக்கு எதிராக நாராயணன் செயல்பட்டதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து புறப்படும் நேரத்தில் எம்.கே.நாராயணன் தாக்கப் பட்டார். காவல் துறையினர் சிறப் பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்திருந்தனர் எனினும், அரங்கில் முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் வரிசையில், போலியான பெயரில் பதிவு செய்து அமர்ந் திருந்த நபர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் இந்த நபரின் உண்மையான பெயர் பிரபாகரன் என்றும் தெரிகிறது.

தன் மீது தாக்குதல் நடத்தப் பட்ட போதிலும், எவ்வித சலன மும் இன்றி, இயல்பான மன நிலை யிலேயே நாராயணன் காணப் பட்டார். பிறகு புன்முறுவலுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென் றார். தாக்குதலில் ஈடுபட்ட நபரை ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள் ளனர். இவரது அரசியல் பின்புலம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும், 15 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x