Last Updated : 17 Aug, 2016 02:46 PM

 

Published : 17 Aug 2016 02:46 PM
Last Updated : 17 Aug 2016 02:46 PM

எதற்காக நடத்தப்படுகிறது கிராம சபைக் கூட்டங்கள்?

அடித்தட்டு மக்களின் அதிகார மையம் எனக் கருதப்படும் கிராம சபைக் கூட்டம், ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 என ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சி யிலும் அதன் தலைவரால் கூட்டப் படும் இந்தக் கூட்டத்தில் கிராம தேவைகள், நிறைவேற்றப்பட்ட பணியை குறித்த திட்ட அறிக்கையை, அரசு அதிகாரி முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அதன் சாராம்சம்.

கிராம சபைக் கூட்ட நடைமுறைகள்

ஊராட்சி மன்றத்துடன் கலந்தாலோசித்து கிராம சபைக்கான கூட்டப் பொருளை தயார் செய்து குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பாக, கூட்டம் குறித்த அறிக்கையை ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிட வேண்டும். தண்டோரா, துண்டுப் பிரசுரம் மற்றும் முக்கிய இடங்களில் விளம்பரம் செய்து, ஊராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

மதச்சார்புடைய வழிபாட்டுத் தலங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது. ஒரே ஊராட்சியை சேர்ந்த பல குக்கிராமங்கள் இருப்பின் சுழற்சி முறையில் வெவ்வேறு குக்கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறை. ஊரக வளர்ச்சி இயக்குநர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் அல்லது மாவட்ட ஆட்சியரால் குறிப்பிடப்படும் இதரப் பொருள் குறித்து கிராம சபையில் விவாதிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் கிராம ஊராட்சிக் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் தொகுத்து அவ்வப்போது நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தெரிவிக்கவேண்டும். ஒரு கிராம சபைக் கூட்டத்துக்கு ரூ.1000-ம் வரை ஊராட்சி நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளலாம் என்பது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

தற்போது நடப்பதென்ன?

ஒவ்வொரு முறையும் ஆட்சியர் அறிவிப்புக்கிணங்க குறிப்பிட்ட தினங்களில் கிராம சபைக்கான கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத் தில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிப்பிட வசதி நிறைவேற்றப்பட்டி ருப்பதாகவும் கூறி ஊராட்சித் தலைவர் அறிக்கை வாசித்து, அதற்கான செலவினங்களையும் முன் வைப்பார்.

கூட்டத்துக்கு வந்திருக்கும் மக்கள் அதைப் பொருட்படுத் தாமல், தலைவர் மூலம் வழங்கப் பட்டிருக்கும் சிற்றுண்டிகளை உண்டு மகிழ்ந்து, அவரது பேச்சுக்கு கைத்தட்டல் செய்துவிட்டு செல் வது தான் வழக்கமாக உள்ளது.

கூட்டத்தில் பெரும்பாலும் ஊராட்சித் தலைவரின் ஆதரவாளர் களே கலந்து கொண்டிருப்பர். அவர்களிடம் மட்டுமே தீர்மான நகலில் கையெழுத்துப் பெற்று, கூட்டத்தில் பங்கேற்காத ஊர் பிரமுகரை ஊராட்சித் தலைவரே நேரில் சென்று கையெழுத்து பெறுவது தற்போதைய நடைமுறையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமம் ஒன்றியம் கள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம், கூட்டம் குறித்து கேட்டபோது, “தலைவரு கூட்டாரு, வந்தோம். டீ குடுத்தாங்க, அப்புறம் கிளர்க்கு படிச்சாரு அதான் தெரியும். அப்புறமா ஒரு நோட்ல ஊர் செலவுன்னு சொல்லி கையெ ழுத்து வாங்கிட்டாங்க” என்றனர்.

ஆனால் கிராம சபைக் கூட்டத்தின்போது, ஆறுகளில் மணல் அள்ள அனுமதியும், போடாத சாலையை போட்டதாகவும், தண்ணீர் வராத குழாய்க்கும், எரியாத மின் விளக் குக்கும், பயன்படுத்தப்படாத கழிப்பறையை கட்டியதற்கான செலவிட்ட தொகைகளை கணக்கெழுதி, எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களிடம் கையெழுத்து பெறுவது தான் வழக்கமாக உள்ளது.

கிராமசபைக் கூட்டம் நடந்து முடிந்த சில தினங்களிலேயே ஒவ்வொரு ஊரிலும் குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்துவதும், ஆறுகளில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவிப்பதும், அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதையும்தான் காணமுடி கிறது.

கிராம மக்களின் கையிலிருக் கும் துருப்புச் சீட்டு கிராம சபைக் கூட்டம். அந்தக் கூட்டம் யாருக்காக எதற்காக நடத்தப்படுகிறது. அதில் நம்முடைய பங்கு என்ன என்பதை பற்றி துளிகூட சிந்திக்காமல், பெரும்பாலானோர் கூட்டத்தைத் தவிர்ப்பதனால் தங்களிடம் உள்ள துருப்புச் சீட்டை இழந்து, பின்னா ளில் வீதிக்கு வந்து போராடு கின்றனர்.

அடிப்படையில் கிராம சபைக் கூட்டத்தின் புரிந்துணர் வையும் விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தவேண்டும். கிராம சபைகளில் அனைத்து மக்களும் கண்டிப்பாக பங்கேற் கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.

மேலும் தொடக்கக் கல்வி நிலையிலேயே கிராம சபைக் கூட்டம் கிராம நிர்வாக நடைமுறைக் குறித்த புரிந்துணர்வை மாணவர் களிடம் ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x