Published : 30 Jan 2017 09:18 AM
Last Updated : 30 Jan 2017 09:18 AM

எண்ணூர் அருகே கப்பல்கள் மோதிய விபத்து: கடல் நீரில் டீசல் கலந்ததால் இறந்து மிதக்கும் ஆமை, மீன்கள்

எண்ணூர் அருகே சரக்கு கப்பல் கள் மோதிய விபத்தில் டீசல் கொட்டியதால் கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பலியாகி வருகின்றன.

எண்ணூர் காமராஜர் துறை முகத்துக்கு ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றிக் கொண்டு பி.டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பல் வந்தது. பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள எண்ணெய் நிறு வனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. சரக்குகளை இறக்கிய பின்னர், அந்தக் கப்பல் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு ஈரானுக்கு புறப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூர் துறைமுகத்துக்கு எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் வந்து கொண்டிருந்தது. துறைமுகத்துக்கு வெளியே ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் சரக்கு கப்பலில் வைக்கப்பட்டிருந்த டீசல் கசிந்து கடலில் கொட்டியது. இதனால் அப்பகுதி கடல் நீர் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சியளிக்கிறது. நீரின் மேற் பரப்பில் தேங்கிய டீசல், அலை காரணமாக எண்ணூர் கடற்கரை முழுவதும் படிந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், திரு வொற்றியூர் பாரதியார் நகர் கடற் கரையில் 4 கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. மேலும் பல ஆமைகள் இறந்து கிடப்பதாக மீன வர்கள் தெரிவிக்கின்றனர். இதைப் போல் ஏராளமான மீன்களும் செத்து மிதக்கின்றன. இதனிடையே கடல் மாசு ஏற்பட்டுள்ளதை அடுத்து நீரில் படர்ந்துள்ள டீசலை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x