Published : 19 Feb 2017 10:13 AM
Last Updated : 19 Feb 2017 10:13 AM

எங்களது எதிர்ப்பு காரணமாகவே சசிகலா 3 முறை விடுதிக்கு வந்தார்: கோவை வடக்கு எம்.எல்.ஏ. அருண்குமார் தகவல்

ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட வர்களை ஏற்கமாட்டோம் என்று கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக கோவை மாநகர் மாவட்டச் செய லாளருமான பி.ஆர்.ஜி.அருண் குமார் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத அவர், நேற்று அதிகாலை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார்.

இதையடுத்து, அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அவரது வீட்டில் குவிந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நேற்று மாலை வரை அவரது வீட்டுக்கு வந்து, தங்களது ஆதரவையும், வாழ்த் தையும் தெரிவித்தனர்.

பின்னர் அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்டுக்கோப் பாக நடத்தப்பட்ட இயக்கம் அதிமுக. ஆனால், அவர்கள் தங்க ளது குடும்பத்தினரை கட்சிக்குள் நுழைக்கவில்லை.

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தற்போது அதிமுகவில் முன்னெடுக்கப் பட்டுள்ளதை கட்சியினர் யாரும் ஏற்கமாட்டார்கள். அதனால் எனது மனசாட்சியின்படியும், மக்கள் கோரிக்கையை ஏற்றும் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் பங்கேற் காமல், கோவை திரும்பிவிட்டேன்.

கூவத்தூர் ரிசார்ட்டில் ஒரு குழுவாகக் கூடி, எங்களது கருத்து களை எடுத்துக் கூறினோம். எங்க ளது எதிர்ப்பு காரணமாகத்தான், சசிகலா 3 முறை ரிசார்ட்டுக்கு வந்து, எங்களை சமாதானப்படுத்தினார். எனினும், எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதேசமயம், எம்.எல்.ஏ.க்களை மிரட்டியதாக வும், பணம் கொடுத்ததாகவும் கூறுவதில் உண்மை இல்லை. இனியும் அவர்களது பிடியில் இருக்கக்கூடாது என்று கருதி, அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

வீட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்று ஜெயலலிதாவால் துரத்தப் பட்டவரை கட்சியில் சேர்த்து, ஒரே நாளில் அவரை துணைப் பொதுச் செயலாளராகவும் நியமித்ததை யாரும் ஏற்கமாட்டார்கள். எனக்கு பணம், பதவி, செல்வாக்கு முக்கியமல்ல. பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு போதும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x