Published : 16 Oct 2014 01:58 PM
Last Updated : 16 Oct 2014 01:58 PM

உரத்தை பதுக்கினால் விற்பனை நிலைய உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பதுக்கி வைக்கும் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப் படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரித் துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா நெல் நடவு பணி நடை பெற்றுவருகிறது. இப்பருவத்தில், 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் நெல் சாகுபடியை மேற் கொள்ள வேளாண் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 80 சதவீதம், திருந்திய நெல் சாகுபடி முறை கையாளப்படுகிறது. இதற்கு தேவையான மேலுரங் கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் இருப்பு வைக்கப்பட்டுள் ளன. தேவைக்கேற்ப உரம் இருப்பு வைக்க

நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு போதிய அளவு நுண்ணூட்ட உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங் களில் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் வழங்கப் படுகிறது. திருவள்ளூர் மாவட்டத் தில், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் அரசு நிர்ணயித்துள்ள விலையில் உரங்கள் விநியோகிக்கப்படுவதை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் கொண்ட உரக் கண்காணிப்பு குழு கண் காணித்து வருகிறது. இதில், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பதுக்கி வைக்கும் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் உர விற்பனை நிலையங் கள் கண்டறியப்பட்டால், உடனடி யாக சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

அதுமட்டுமல்லாமல், விற்பனை யாளர் மீது அத்தியாவசிய குடிமைப்பொருள் வழங்கும் சட்டம் மற்றும் உரக் கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரித்துள்ளார். மேலும், உரம் சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களுக்கு விவசாயிகள் 044-27662852 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி யுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x