Published : 14 Apr 2016 08:55 AM
Last Updated : 14 Apr 2016 08:55 AM

உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவிக்கிறது: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்

ஓஎன்ஜிசி நிறுவனம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரி வித்து வருவதாக தமிழ்நாடு அறி வியல் இயக்கம் கண்டனம் தெரி வித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறி வியல் இயக்க திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் பி.ரமேஷ், வி.சேதுராமன், யு.எஸ்.பொன்முடி ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா பகுதியில் ஷேல் காஸ் எடுப்பது தொடர்பாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆய்வு முயற்சி பற்றிய தகவல்களை, மக்களின் கவனத்துக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொண்டு வந்தது. இதையடுத்து, ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரி டெல்டாவில் ஷேல் கேஸ் எடுப்பதில்லை என்றும், தகவல்களை வெளிக் கொண்டு வந்ததை, தீய சக்தி களின் செயல் என்றும் கூறி விளம் பரம் வெளியிட்டது. அதே நாளில் பசுமை தீர்ப்பாயத்தில் ஷேல் காஸ் தொடர்பான வழக்கில், ஓஎன்ஜிசி நிறுவனம் தனது வாதத்தில், ஷேல் எண்ணெய் எடுக்க அனுமதி பெற் றுள்ளதையும், மார்ச் 2017-க்குள் காவிரி டெல்டாவில் ஏதேனும் ஒரு இடத்திலாவது ஆய்வுப் பணி மேற்கொண்டு, கிணறு அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியது.

மேலும், இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனு மதி வழங்கவில்லை, அனுமதி பெறும்வரை பணிகள் தொடங்கப் படாது எனவும் தெரிவித்துள்ளது.

ஷேல் எண்ணெய், ஷேல் காஸ் திட்டத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல, பொதுமக்களுக்கு விளம் பரம் செய்த ஓஎன்ஜிசி நிறுவனம், அதற்கு நேர்மாறான தகவலை பசுமை தீர்ப்பாயத்தில் பதிவு செய்திருப்பது மக்களை திசை திருப்பும் செயலாகும். இதன் மூலம், அறிவியல் இயக்கம் தெரி வித்த தகவல்கள் உண்மை என் பதை, பசுமை தீர்ப்பாயத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கூறியுள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன.

ஷேல் காஸ், எண்ணெய் எடுக்க 10,000 அடிக்கு கீழ் துளை யிட்டு, நீரியல் விரிசல் முறையை மேற்கொள்ள வேண்டியது அவசி யமாகிறது. அதற்கு 15 கோடி முதல் 20 கோடி லிட்டர் வரை நீர் தேவை என்றும், அந்த நீருடன் 600-க்கும் மேற்பட்ட ரசாயனங்களை பயன்படுத்துவதால் நீராதாரங் களுக்கும், விவசாய நிலங்க ளுக்கும் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற செயல்பாடுகள் டெல்டா பகுதி மக்களுக்கு ஒருபோதும் நன்மை அளிக்காது.

ஓஎன்ஜிசி விளம்பரத்தில், ஷேல் காஸை ஓஎன்ஜிசி எடுப்பதில்லை என்று தெரிவித்திருக்கும் சூழலில், ஒரு ஆய்வுக் கிணறுக்கு ரூ.45 கோடி என்ற அடிப்படையில் காவிரி டெல்டாவில் 5 ஆய்வுக் கிணறுகள் அமைக்க ரூ.225 கோடி செலவு செய்வது எதற்காக என்பதை ஓஎன்ஜிசி பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x