Published : 16 Aug 2015 10:10 AM
Last Updated : 16 Aug 2015 10:10 AM

ஈரோடு பெண்ணுக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது: கனரக வாகனம் ஓட்டுவதற்காக கிடைத்த கவுரவம்

ஈரோட்டை சேர்ந்த பெண் லாரி ஓட்டுநர் வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை பெற்றுள்ளார்.

வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஈரோடு மாவட் டத்தை சேர்ந்த ஜோதிமணி(30) தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு இந்த விருதை நேற்று முதல்வர் ஜெயலலிதா சென்னை யில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வழங்கி கவுரவித்தார். விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப் புள்ள தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட் டன.

ஈரோடு மாவட்டம், கோபிசெட் டிப்பாளையம் வட்டம், கணக்கம் பாளையம் கிராமத்தில் உள்ள மஜ்ரா வடகள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி, லாரி ஓட்டு நராக பணிபுரிகிறார். இவர் துணிச் சலாக கனரக வாகனம் இயக்கி வருவதற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்பிக்கும் வகையில், ஈரோட்டை சேர்ந்த ஜோதிமணி தமிழகத்தின் ஒரே பெண் லாரி ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 16 டன் எடை கொண்ட கனரக வாகனத்தை லாவகமாக ஓட்டுவதில் வல்லவர். இவரது கணவர் கவுதமனும் லாரி ஓட்டுநர். அவருக்கு சொந்தமான லாரி மூலம் இவர் கனரக வாகனம் ஒட்டுவதை கற்று தேர்ந்தார். பின்னர் கணவருக்கு இணையாக சொந்தமாக ஜோதிமணி மற்றொரு லாரியை வாங்கி இயக்கி வருகி றார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி பயணத்தை தொடங்கிய ஜோதிமணி ஒரே ஒரு விபத்தை தவிர, லாரியை லாவகமாக இயக்கி வருவது அவரின் திறமைக்கும், பொறுமைக்கும் உதாரணமாக உள்ளது.

வெளிமாநிலங்களுக்கு தன்னந் தனியாக ஜோதிமணி ஒரு மாதம் வரை பயணம் செய்வதுண்டு. இவரது இரு குழந்தைகளையும் பாட்டி கவனித்துக் கொள்வதால், ஜோதிமணி குடும்ப கவலையின்றி செய்யும் தொழிலை திறம்பட வும், நேர்த்தியாகவும் செய்து, வீரதீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வர் ஜெய லலிதாவிடம் பெற்று ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வலம் வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x