Published : 15 Jun 2016 08:12 AM
Last Updated : 15 Jun 2016 08:12 AM

இளம் கலைஞர்களை ஊக்குவிக்க சென்னை மியூசிக் அகாடமியில் ஆண்டின் மத்தியிலும் நடன நிகழ்ச்சிகள்: 23-ம் தேதி தொடங்குவதாக தலைவர் என்.முரளி அறிவிப்பு

இளம் நடனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு முதல் ஆண்டின் மத்தியிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சென்னை மியூசிக் அகாடமி அறிவித் துள்ளது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் வரும் 23-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கின்றன.

இதுதொடர்பாக மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளையும் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். மார்கழி மாத இசைக் கச்சேரிகள் முடிந்ததும், இந்த நடன நிகழ்ச்சி கள் நடத்தப்படுகின்றன.

இளம் நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ‘தி ஸ்பிரிட் ஆஃப் யூத் ஃபெஸ்டிவல்’, ‘ஹெச்.சி.எல். கான்செர்ட் சீரிஸ்’, கே.சந்திரசேகரன் அறக்கட்டளை நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்ச்சி களை ஆண்டுதோறும் மியூசிக் அகாடமி வழங்கி வருகிறது.

மியூசிக் அகாடமியில் ஒவ் வொரு ஆண்டும் நடத்தப்படும் நாட்டியத் திருவிழாவில் பங்கேற்க இயலாத இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டுமுதல், ஆண்டின் மத்தியில் நாட்டியத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த இசைக் கலைஞர் எம்.என்.சுப்ரமணியனின் குடும் பத்தார் நிர்வகிக்கும் அறக் கட்டளையால் இத்தகைய முயற்சி சாத்தியமாகியுள்ளது. இதன்படி, ஜூன் 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு மியூசிக் அகாடமியில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

ஜூன் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு ஹரிணி ஜீவிதாவும், இரவு 7.30 மணிக்கு பவித்ரா னிவாசனும் பரதநாட்டிய நிகழ்ச்சி வழங்குகின்றனர். ஜூன் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு தக்‌ஷினா வைத்தியநாதனும், மாலை 7.30 மணிக்கு ஹரிபத்மனும் பரதநாட்டியம் ஆடுகின்றனர். ஜூன் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரியதர்சினி கோவிந்தராஜனின் பரதநாட்டியமும், இரவு 7.30 மணிக்கு மிதில் தேவிகாவின் மோகினியாட்டமும் அரங்கேற்றப் பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.

இவ்வாறு என்.முரளி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x