Published : 26 Mar 2014 10:04 AM
Last Updated : 26 Mar 2014 10:04 AM

இலக்கிய திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் காலமானார்

சாகித்ய அகடமி விருது பெற்ற முதுபெரும் இலக்கிய திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (செவ்வாய் கிழமை) திருநெல்வேலியில் காலமானார். அவருக்கு வயது 89.

மறைந்த தி.க.சிவசங்கரனுக்கு 3 மகள்கள் மற்றும் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான தி.க.சிவசங்கரன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தாமரை என்ற புத்தகத்தின் ஆசிரியராக இருந்தார். சோவியத் செய்தித் துறையின் ஆசிரியர் குழுவில் 25 ஆண்டுகளாக அங்கம் வகித்துவந்தார்.

"இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. தமிழில் வெளியாகும் அனைத்து இலக்கிய படைப்புகளையும் முழுமையாக வாசித்துவிட்டு அதன் ஆசிரியரை தொடர்பு கொண்டு பாராட்டும் வழக்கம் கொண்டிருந்தார் தி.க.சிவசங்கரன்" என எழுத்தாளர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x