Last Updated : 30 Nov, 2015 10:27 AM

 

Published : 30 Nov 2015 10:27 AM
Last Updated : 30 Nov 2015 10:27 AM

இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும் வெட்டிவேரை கடலோர மாவட்டங்களில் பயிரிட அரசு ஊக்குவிப்பு: மருத்துவ, நறுமண ஆலைகளில் மணமூட்டியாக பயன்படுகிறது

புயல், வெள்ளம், அதிக வெயில் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு முதலில் இலக்காவது விவசாயம் தான். அதுவும் கடலோர மாவட்டங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இழப்பு அதிக மாகவே இருக்கும். தற்காலச் சூழலில், எத்தகைய இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி பலன் தரக்கூடிய பணப்பயிராக வெட்டி வேர் விளங்குகிறது.

தாவர வகைகளில் புல் வகை யைச் சார்ந்த வெட்டிவேர் தனி வாசனை கொண்ட புல்லாகும். இதற்கு குருவேர், விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களும் உண்டு. இது பெரும்பாலும் மணற் பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் நன்றாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற் களைப் போல் வளரும். மண் அரி மானத்தைத் தடுக்கவும், மண்ணில் நீர் சேமிக்கப்படுவதை தடுக்கும் தனிமங்களை நீக்கி மண்ணை செம்மைப்படுத்தவும், சரிவான, குறுகலான கரைகளில் வெட்டிவேர் நடப்படுகிறது.

தீப்பிடித்தாலும், மழை பெய்தா லும் இந்த தாவரத்தினுடைய வேர் உயிருடன் இருந்து நீண்ட காலம் வாழும் திறனுடையது. எவ்வித உரமோ, பயிர் பாதுகாப்பு மருந்தோ இதற்கு தேவையில்லை. தென்னந்தோப்பில் நீரை சேமிக்க உதவும் வெட்டிவேரை, வீட்டுத் தோட்டங்களில் கூட வாசனைக்காக வளர்கிறார்கள். வெட்டிவேர் எந்த ஒரு பயிருக்கும் கேடு விளைவிப் பதில்லை.

அடிக்கடி இயற்கைச் சீற்றத்துக் குள்ளாகும் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பல இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலை யில், மாவட்டத்தின் கடலோர பகுதி விவசாயிகளுக்கு வெட்டிவேர் சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப் பட்டது. தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகத்தின் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வெட்டிவேர் சாகுபடி முறை, அதன் பயன்கள், தேவைகள், அவற்றை வணிகப்படுத்துவது குறித்து இந்த பயிற்சி வழங்கப்பட்டது.

இதைப் பயன்படுத்தி மாவட்டத் தின் கடலோர பகுதிகளில் வெட்டி வேர் சாகுபடியை ஊக்குவித்து வருகின்றனர். இது தொடர்பாக மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும் பேராசிரியருமான அனிஷாராணி கூறியதாவது: வெட்டிவேரியா சைசனியாய்ட்ஸ் என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெட்டிவேர், வடமாநிலங் களில் கஸ் என அழைக்கப்படுகிறது.

பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட வெட்டிவேர், வணிக நறுமண உற்பத்திக்கும், அரோமா தெரபி எனும் நறுமண மருத்துவ உபயோகத்துக்கும், உணவு மற்றும் வாசனை தொழிற்சாலைகளிலும், அழகு சாதனப் பொருட்களில் மணமூட்டவும் பயன்படுத்தப்படு கிறது

உலக அளவில் வெட்டிவேர் உற்பத்தி 300 டன்கள். இதில் வாச னைப் பொருட்கள் உற்பத்தியில் வெட்டிவேர் எண்ணெயின் தேவை 250 டன்னாக உள்ளது. நரம்பு, சிறுநீரகம் உள்ளிட்ட மனித உட லின் உள்நோயை தீர்க்கக் கூடிய மருந்துகளில் வெட்டிவேரின் பயன் பாடு அதிகமிருப்பதால் மருத்துவத் துறையிலும் வெட்டிவேரின் தேவை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 100 டன்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பி னும் 80 சதவீத தேவைக்கு இறக்கு மதி செய்யவேண்டிய கட்டாயத் தில் தான் இந்தியா உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி கடலோர விவசாயிகள் வெட்டிவேரை சாகுபடி செய்தால், எந்த சூழலிலும் வருமானத்தைப் பெருக்கமுடியும். எனவேதான் நொச்சிக்காடு, தியாகவல்லி ஆகிய பகுதிகளில் வெட்டிவேர் சாகுபடியை ஊக்கு வித்து வருகிறோம்.

தற்போது அவர்களுக்கு உள்ள பிரச்சினை சாகுபடி செய்யப்பட்ட வெட்டிவேரை வணிகரீதியில் சந் தைப்படுத்துவதுதான். அதையும் அவர்களுக்கு கற்றுத் தருகிறோம். ஏக்கருக்கு 3 முதல் 6 டன் வரை மகசூல் பெறமுடியும். இதன்மூலம் விவசாயிக்கு ஆண்டு வருமானமாக ரூ.1 லட்சம் வரை எளிதாக கிடைக் கும். 12 மாதங்களில் இருந்து 14 மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.

13 மாவட்டங்களில்..

தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் வெட்டிவேர் சாகுபடியை ஊக்கப்படுத்தினால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப் பதோடு, விவசாயிகளுக்கும் வருவாயை ஈட்டிக் கொடுக்கலாம் என்று அனிஷாராணி கூறினார்.

இது தொடர்பாக கோவை தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக மருந்து மற்றும் மணமூட்டும் பயிர் கள் துறை தலைவர் ராஜாமணியிடம் கேட்டபோது, ‘வெட்டிவேரில் தாரணி என்ற ரகத்தின் மூலம் கிடைக்கும் எண்ணெய் அதிக லாபம் கிடைக்கக் கூடியது.

இந்த எண்ணெய்யால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவேதான் இதை நேரடி யாக உணவுப் பொருளாக மேலை நாடுகளில் உட்கொள்கின்றனர். மருத்துவப் பயன்பாட்டுக்கும், வாசனைப் பொருட்களிலும் அதிக அளவு பயன்படுத்துகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x